Thursday, November 27, 2003

தேவன்
--ஹரன்பிரசன்னா

தேவன் ஒரு நகைச்சுவை கட்டுரையாளர் மற்றும் கதையாளர் என்ற ஒரு வரி அறிமுகம் மட்டுமே இருந்தது எனக்கு.அவர் எழுதிய கதைகளையோ கவிதைகளையோ ஒன்றைக்கூட வாசித்ததில்லை (கற்றதும் பெற்றதும்-இல் சுஜாதா தந்த அறிமுகக்கட்டுரை தவிர). தேசிகண் பக்கத்தைப் பார்வையிட்டபோது அதில் முதலில் சுஜாதாவின் படைப்புகளை மட்டுந்தான் பார்த்தேன். அதில் சிரிக்க, சிந்திக்க என்ற தலைப்பிலிருந்த சுட்டியைச் சொடுக்கியபோது அதனுள் தேவனின் எழுத்துகள் இருப்பது தெரிந்தது.

கற்றதும் பெற்றதும் பகுதியில் ஒருமுறை தேவன் பற்றிச் சொல்லப்பட்டதாக நினைவு. அதில் தேவனின் ஒரு கட்டுரையையும் வெளியிட்டிருந்தார் சுஜாதா. அந்தக் கட்டுரையைப் படித்தபோது அதில் அத்தனை தூரம் நகைச்சுவை இருந்ததாகத் தெரியவில்லை அந்த வயதில். நகைச்சுவை என்றால் திரைப்படத்தில் வரும் காட்சிகளும். வெடிச்சிரிப்பும் மட்டுமே என்றளவில்தான் எனக்கு அறிமுகமாகியிருந்த வயது அது. தேவனை ஏன் சுஜாதா இத்தனை புகழ்கிறார் என்று நினைத்துக்கொண்டு அதை மறந்துவிட்டேன்.

ஒரு வருடத்திற்கு முன்பாக, கிரேஸி மோகன் ஏதோ ஒரு பேட்டியில் தன் எழுத்துகளுக்கு இன்ஸ்பிரேஷனாக தேவனைக் குறிப்பிட்டார். பெரிய ச்சரியம் எனக்கு. சுஜாதா தந்த கட்டுரையைத் தொடர்ந்த என் எண்ணம் கொஞ்சம் சிதையுற ரம்பித்தது கிரேஸி மோகஆனால்தான். கிரேஸி மோகனின் டைமிங் ஜோக் மீது மிகப்பெரிய மரியாதை எனக்கு
அப்போது. அவரே தேவனைப் பற்றிச் சொன்னதைக் கேட்டபோது, தேவன் மீது ஆர்வம்பிறந்தது. ஆனாலும் தேவனைத் தேடிப்பிடித்துப் படிக்கக்கூடிய வெறி இல்லாமல் போனது.

கல்கியின் நகைச்சுவை ததும்பும் கட்டுரைகளைப் படித்தபோது, எனக்கு மென்மையான நகைச்சுவைக் கட்டுரைகள் மீதும், நகைச்சுவை எழுத்தின் மீதும் ஒரு பெரிய கவனிப்பு பிறந்ததாக உணர்கிறேன். அலையோசையில் வரும் இரண்டு கதாபாத்திரங்கள் தொடர்ந்து
பத்திரிகையில் மாறி மாறி அடித்துக்கொள்வார்கள். அதை விவரித்த விதம் மென்நகைச்சுவை எழுத்துகளைப் பற்றிய ஒரு ஆர்வத்தைத் தந்தது. அப்போதும் தேவனின் எழுத்துகளைப் படிக்க நினைத்துக்கொண்டேன்.

தேசிகனின் பக்கத்தில் தேவனைப் பார்த்தபோது எனக்குத் தேவனையே நேரில் பார்த்தது மாதிரி இருந்தது. உடனடியாக இறக்கம் செய்து ப்ரிண்ட் எடுத்து, படித்து முடித்து, ரொம்ப இரசித்து, மீண்டும் படித்து அதை உங்களுக்கும் அறிமுகம் செய்யலாம் என நினைத்து, இதை எழுதிக்கொண்டிருக்கிறேன்.

தேவனைப் பற்றிய பெரிய அறிமுகம் என்ஆனால் தரமுடியாது என்பதை மிகத் தெளிவாக உணர்கிறேன். தேசிகனின் பக்கத்தில் உள்ள தேவனின் கட்டுரைகள் மட்டும் தேவனைப் பற்றி முழுமையாகச் சொல்லாது என்ற என் எண்ணம்தான் அதற்குக் காரணம். ஆனால் தேவனின் நகைச்சுவை உணர்வைப் பற்றிய ஒரு அறிமுகம் நிச்சயம் கிடைக்கும். இந்த
நகைச்சுவையில் எத்தனை பேருக்குக் கருத்து பேதம் இருக்கும் எனத் தெரியவில்லை. காரணம், முதலில் மென்மையான நகைச்சுவை. படித்த மாத்திரத்தில் பொங்கிப் பொங்கிச் சிரிக்க முடியாது. ஆனால் கட்டுரை முழுதும் ஒரு விதமான புன்னகையை வரவழைக்கும் தொடர்களும் வார்த்தைகளும் விரவி இருப்பதைக் காணலாம். இரண்டாவது அந்தக்
கட்டுரையின் காலகட்டம். ஒரு படைப்பை உள்வாங்கும்போது அது எந்தக் காலகட்டத்தில் எழுதப்பட்டது என்ற பார்வையும் அதற்கு ஏற்றாற்போன்ற ஒரு உள்வாங்குதலும் அவசியமாகிறது. (பாரதி மட்டும் விதிவிலக்கு. எந்தக் காலத்திற்கும் அவன் கவிதைகள்
பொருந்திவருகின்றன). தேவனின் எந்தக் காலகட்டத்தைச் சேர்ந்தவர் என்பது மிகச்சரியாக எனக்குத் தெரியவில்லை. (யாராவது சொன்ஆனால் நன்றி). ஆனாலும் கட்டுரையை முழுமையாக உள்வாங்க முடிந்ததாகத்தான் தோன்றியது.

எந்த வித இருண்மையும் இல்லாத மிகத்தெளிவான வரிகள். பூடகமில்லாத நேரடியான நகைச்சுவை. தேர்ந்தெடுத்த வார்த்தைகள். மனத்தை நோகச்செய்யாத கிண்டல் மற்றும் நையாண்டி, அதன் வாயிலாக எல்லோருக்கும் போய்ச்சேரவேண்டிய கருத்து - இவையெல்லாம் தேவனின் எழுத்துகளின் பலமாக என் பார்வைக்குத் தெரிகிறது.

தமிழ் எழுத்துலகில் மிகக்குறைவாகவே தரமான நகைச்சுவை எழுத்தாளர்கள் இருந்திருக்கிறார்கள். விரல்விட்டு எண்ணிவிடலாம். அவர்களில் தேவனுக்கு ஒரு மிகப்பெரிய பங்கு இருக்கிறது.
"புகழும் புகழ்ச்சியும்"என்ற கட்டுரை மிகப்பெரிய அறிவுரை தொனியுடன் துவங்குகிறது. போகப் போக தேவனின் வரிகள் ஹாஸ்யத்தைத் தர ரம்பிக்கின்றன. Slow and steady wins the race! இந்தச் சூத்திரம் தேவனுக்கு மிக இஷ்டமானதாக இருந்திருக்கவேண்டும். அந்தக்
கட்டுரையிலிருந்து சில வரிகள்.

"நான் கரூருக்குப் போனவாரம் போய்விட்டு வந்தேன். போகும்போது என்னைப் பார்த்தவர்கள், ஒரு வாரம் விச்ராந்தியாகப் போய், குடும்பத்தாருடன் இருந்துவிட்டு வரப்போகிறான் என்று எண்ணியிருப்பார்கள். வருகிறபோது நான் சந்தோஷமாகத்தான் திரும்பினேன். அப்போது என்னைக் கவனித்தவர்கள், குஷியாகக் காலந்தள்ளிவிட்டு நிஷ்கவலையாக வருகிறான் என்றுதான் எண்ணியிருக்க வேண்டும்.............
........வியாழக் கிழமை சாயந்திரம் ரயில்வே ஸ்டேஷனில் ஒரு சாமி தலைதெறிக்க ஓடிப்போய், ரயில் வண்டிக்குள் புகுந்ததை ஸ்டேஷன் மாஸ்டர் நாலைந்து போட்டார்கள், ஒரு கார்டு, சுமார் ஐம்பது ஜனங்கள் இத்தனை பேரும் பார்த்திருப்பார்கள். அப்படி ஓடினவன் நாந்தான் என்று அறிமுகப் படுத்திக்கொள்கிறேன்..."

அப்படி ஓடினவன் நாந்தான் என அறிமுகப்படுத்திக்கொள்கிறேன் என்று தேவன் எழுதியதைப் படித்தபோது எனக்கு நிஜமாகவே சிரிப்பு வந்துவிட்டது. வருடங்கள் பல கடந்தாலும், இன்னும் சிரிக்க முடிகிறதென்றால், அதை விட பெரிய வெற்றி ஒரு எழுத்திற்கு, வேறெதாக இருக்க முடியும்?

அதே கட்டுரையில், வீட்டில் சுண்டெலியின் தொல்லை தாங்கமுடியவில்லை என்று சொல்லி வீட்டுக்காரரிடம் முறையிடுவதாக ஒரு காட்சியை அமைத்திருக்கிறார்.

"காலையில் வீட்டுக்காரரிடம் "உங்கள் வீட்டில் சுண்டெலி நடமாடுகிறதோ?"

"ஹ¥ம் சொப்பனம் கண்டிருப்பீர்"என்றார் அவர்.

"இல்லை நிஜமாக வருகிறது"என்றேன்.

"ஏங்காணும் வீணாய்? இந்த வீட்டிற்கு வருந்தி வருந்தி அழைத்தால் கூடச் சுண்டெலி வராதே! ஆயிரம் ரூபாய் தருகிறேன், ஒரு சுண்டெலி காணியும்"என்றார்!

அவர் சொல்வதைப் பார்த்தால், நான் ஆயிரம் ரூபாய் கண்டிராதவன். அதைச் சொல்வதற்காக அவரிடம் சுண்டெலி இருப்பதாகச் சொல்கிறேன் என்றுதான் அவர் எண்ணுகிறார் என்று தோன்றிற்று.

"ஓய்.. எனக்கு ஆயிரம் ரூபாய் வேண்டாம். எலி வராமல் இருந்தால் போதும்"என்றேன்.

ஊரெல்லாம் வீடு காலி இல்லை என்று பேச்சாயிருக்கும்போது, சுண்டெலி விஷயமாக, வீட்டுக்காரருடன் வாக்குவாதம் வைத்துக்கொள்ள நான் விரும்பவில்லை. அவர், "என் வீட்டிற்குச் சுண்டெலிதான் முக்கியம். உம்ம குடும்பம் முக்கிய மில்லை"என்று சொல்லி விடலாமல்லாவா? "

நகைச்சுவையின் நாசூக்கான, நளினமான வெளிப்பாடு என்று தோன்றியது இந்தக் கட்டுரையைப் படித்தபோது.

எல்லா கட்டுரைகளிலும் கிண்டலும் அங்கதமும் கலந்துகட்டி வருகின்றன. சொப்பனம் பலிக்குமா என்ற கட்டுரை ஒரு சிறுகதை மாதிரி இருக்கிறது. குறிப்பாய் முடிவு. முடிவு அப்படியே சுஜாதா ஸ்டைல்.

தேசிகன பக்கத்திலுள்ள தேவனின் மற்ற கட்டுரைகளையும் படித்துவிட்டுச் சொல்லுங்கள்.

தேவன் பக்கத்தில்-

பொழுதைப் போக்காதே கட்டுரையில் தீடீரென பிரபுதேவா பற்றியும் சதானந்த ஸ்வாமிகள் பற்றியும் இயக்குநர் விக்ரமன் பற்றியும் வர டிப்போய்விட்டேன். தேவன் எந்த காலகட்டத்தைச் சேர்ந்தவர் என்று எனக்குக் குழப்பம் வந்ததே இந்த இடத்தில்தான். :(

ஏதோ பிழை நேர்ந்திருக்கிறது. நண்பர் தேசிகனுக்கு வலையேற்றியபின் படித்துத் திருத்த நேரமிருந்திருக்காது. அதைப் படித்துவிட்டு நண்பர்கள் என்னைப் போல் குழம்பிக்கொள்ள வேண்டாம் என்பதற்காக்த்தான் சொல்கிறேன்.

சுஜாதா அறிமுகப்படுத்திய, பொம்மைக்கடையில் பார்க்கும் நாயைப் பற்றிய கட்டுரை தேசிகன் பக்கத்தில் இல்லை. யாரிடமாவது இருந்தால், தயவுசெய்து உள்ளிடவும்.

இந்த மடலை மரத்தடிக்குழுமத்தில் உள்ளிட்டபோது பத்ரி எதிர்வினைத்திருந்தார். அவரின் மடல்.

"தேவன் (இயற்பெயர் ர்.மகாதேவன்) பிறந்தது: 08/09/1913 இறந்தது: 05/05/1957. கும்பகோணம் அரசினர் கல்லூரியில் BA படித்துவிட்டு 1934 முதல் 1957 (சாகும்) வரை விகடனில் பணி யாற்றினார், அதில் கடைசி 13 வருடங்கள் விகடனின் நிர்வாக சிரியராக.

அவரது கதைகளில் கும்பகோணமும், சென்னையும் பிரதானமாக வரும்.

கல்கியில் (12/09/1982) சுஜாதா தேவனப் பற்றி எழுதுகையில் "அமரர் தேவனின் கதைகளை ஏறக் குறைய ஒன்று விடாமல் படித்தவன் நான். என்னைப் போன்ற எழுத்தாளர்களுக்கு ஒரு
முன்னோடியாகவும், மானசீக குருவாகவும் இருந்திருக்கும், திரு.கல்கி, திரு. தேவன் போன்றவர்களை எங்களால் மறப்பது சாத்தியமில்லை."என்று சொல்லியிருக்கிறார். (மேற்கோள் 'மிஸ்டர்
வேதாந்தம்' புத்தகத்திலிருந்து)

தேவன் 'துப்பறியும் சாம்பு' என்னும் பாத்திரத்தை உருவாக்கியவர். நகைச்சுவை அவரது எழுத்தில் எப்பொழுதும் வழிந்தோடும் (கட்டுரைகளில் மட்டுமல்ல, கதைகளிலும்). தேவன் கதை சொல்வதில் வல்லவர். தீவிர இலக்கியம் படைக்கவில்லை என்றாலும், மிக வேகமாகச் செல்லக்கூடிய, திருப்பங்கள் நிறைந்த (கிட்டத்தட்ட இன்றைய மெகா சீரியல் மாதிரி, ஆனால் இன்றைய கேவலமான
ஜவ்வு இழுக்கும் பேத்தல்கள் மாதிரி இல்லாமல், தரத்துடன்) வெகுஜனங்கள் விரும்பும் கதையையும், வெகுஜனங்கள் அவரது பாத்திரத்தோடு ஒன்றி விடும் கதாபாத்திரங்களையும் படைப்பதில் வல்லவர்.

மிஸ்டர் வேதாந்தம் அந்த வகையில் அருமையான நாவல். அதைத் தவிர ஜஸ்டிஸ் ஜகந்நாதன், ஸி.ஐ.டி.சந்துரு, ஸ்ரீமான் சுதர்சனம், கோமதியின் காதலன் போன்ற கதைகளை எழுதியுள்ளார். எண்ணற்ற சிறுகதைகளையும் எழுதியுள்ளார்."


நண்பர் யக்ஞநாராயணனும் தேவன் பற்றிச் சொல்லியிருந்தார்.

தேவன் (R.Mahadevan) 8-9-13ல் திருவிடைமருதூரில் பிறந்தார். அவ்வூரில் உயர் கல்வியும், பின்னர் கும்பகோணம் அரசாங்கக் கல்லூரியில் B.A. பட்டமும் பெற்றார். சிறிது காலம் பள்ளி சிரியராகப் பணியாற்றிய பின், 'னந்த விகடன்'ல் உதவி சிரியராகச் சேர்ந்தார். பிறகு 1942ம் ண்டு முதல் 1957ம் ண்டு வரை நிர்வாக சிரியர் இருந்தார். 23 ண்டு காலம் அப்பத்திரிகையில் பல்வேறு சுவையான கதைகள், கட்டுரைகள் எழுதி சிறந்த எழுத்தாளர்களில் ஒருவராக விளங்கினார். நகைச்சுவை நிறைந்த இவருடய எழுத்துக்களில் 'துப்பறியும் சாம்பு', 'விச்சுவுக்குக் கடிதங்கள்', 'ராஜாமணி', 'கோமதியின் காதலன்' - போன்ற படைப்புகள் மிகப் பிரபலமானவை. 'தேவன்' தமிழ் எழுத்தாளர் சங்கத் தலைவராக இரண்டு முறை பதவி வகித்து, சிறந்து தொண்டாற்றினார். பத்திரிகை எழுத்துத் துறையில் அவர் கையாளாத உத்திகளே இல்லை என்று சொல்லும் முறையில் அவர் எழுதி வந்தார். 1957ம் ண்டு 'தேவன்' தம்முடைய 44-வது வயதில் இறைவனடி எய்தினார்."

அப்புசாமி.காம் வலைத்தளத்திலும் தேவனின் சில கட்டுரைகள் காணக்கிடைக்கின்றன.

No comments: