Tuesday, November 23, 2004

உயிர்த்தெழும் மரம் - கவிதை

காலையில் கண்விழிக்கிறது மரம்
இரவின் மௌனத்திற்குப் பின்
பறவைகளின் கனவுக்குப் பின்
பூமியிறங்கும் பனியுடன்
அன்றைய நாளின் பலனறியாமல்

மரம் இசைக்கும் மௌனமான சங்கீதம்
பறவைகளின் சத்தத்தில் அமிழ்ந்துவிடுகிறது
பெருங்காற்றில் அசையும்போது
விலகும் தாளம், சுருதி பேதத்தை
அதிகாலையில் மீட்டெடுக்கும் மரம்
வாகனங்களின் சத்தத்தில் மீண்டும் தவறவிடுகிறது
முன்பனியில்
அல்லது பின்னோர் மழைநாளில்
உயிர்த்தெழுகிறது
குழந்தைக்கான உத்வேகத்துடன்
இத்தனையின் போதும்
எப்போதும் ஓய்வதில்லை
மரத்தினூடாக நிகழ்ந்துகொண்டேயிருக்கும்
அதன் பேரமைதிக் கச்சேரி

5 comments:

Anonymous said...

கவிதை நன்றாக இருக்கிறது கரன். ஆனால் கவிதைக்கு முக்கியமான ஒரு சிறப்பம்சமும் தேவை. அதை பிறிதிலாத புதுமை[ அனன்யத] என்று அரவிந்தர் பெயர் சூட்டுகிறார். இக்கவிதை தேவதேவனை நினைவூட்டுகிறது. ஆனால் நீங்கள் கவிஞர் என்றும் காட்டுகிறது. பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்
ஜெயமோகன்

Anonymous said...

அன்பார்ந்த ஜெயமோகன், உங்கள் கருத்துக்கு நன்றி. தொடர்ச்சியான வாசிப்பு மற்றும் அனுபவத்தின் மூலமே சிறந்த கவிதைகளை படைக்க முடியும் என்று நம்புகிறேன். தொடர்ந்து வாசித்துக்கொண்டிருக்கிறேன். உங்கள் கருத்து நான் எதிர்பார்க்காததும், மிகுந்த மகிழ்ச்சி தருவதும், பெரும் ஊக்கம் தருவதும். நன்றியுடன், ஹரன் பிரசன்னா

Anonymous said...

«Õ¨ÁÂ¡É µð¼õ. þÂøÀ¡¸ «¨ÁóÐ, ¿¡Çí¸Ç¢ø «É¡Åº¢ÂÁ¡É ºÄÉí¸¨Ç ¯ñ¼¡ì¸¡Áø, þ¨¼äÈ¢ýÈ¢ ¸ÅÉò¨¾ ®÷òÐŢθ¢ÈÐ.
«ó¾ô §ÀèÁ¾¢ì¸î§ºÃ¢ ±ýÈ ÓÃñ¸Ç¢ý §º÷쨸 ¿ýÚ.
«ýÒ¼ý
‚Áí¨¸

Anonymous said...

ஸ்ரீமங்கை, உங்கள் கருத்துக்கு நன்றி. அன்புடன், பிரசன்னா

Anonymous said...

Dear Haran Prasanna,
Your skills are improving every other day or other try. Keep trying for good poems and definitely you can make a good poems like these. I enjoyed this poem. your words coining makes the poem fully meaning full and makes the reader to enjoy.

vaazhthukkaludan.. jeyakumar