Tuesday, March 28, 2006

மஹரிஷி - அஞ்சலி

நாங்கள் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தபோது மஹரிஷியின் சீடர்களுள் ஒருவர் எங்கள் கல்லூரிக்கு வந்து எங்களுக்கு ஆன்மிகம் பற்றியும் அறிவுத் திருக்கோயில் பணிகள் பற்றியும் சொற்பொழிவாற்றினார். அவர் சொன்ன எளிய உவமைகள் இன்றும் மனதில் அப்படியே இருக்கின்றன. அந்நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்த ஆசிரியர் செந்தில் பகவதி முருகன் மஹரிஷியின் தீவிரப் பக்தர்களில் ஒருவர். அவர் மஹரிஷியைப் பற்றி நிறைய விஷயங்கள் அடிக்கடிச் சொல்வார்.

Thanks:http://vethathiri.org


மஹரிஷியைப் பற்றி நான் அதிகம் யோசிக்கத் தொடங்கியது எனது 21 - ஆம் வயது வாக்கில். எங்களுக்கு மேலதிகாரியாக இருந்த தண்டவேல் மஹரிஷியின் தீவிர பக்தர். அவர் எங்களுக்கு மஹரிஷியைப் பற்றியும் அவரது ஆன்மிகக் கருத்துகள் பற்றியும் அவரது எளிய குண்டலினிப் பயிற்சி பற்றியும் விடாமல் தினமும் சொல்லி வந்தார். அவரது புத்தகங்கள் சிலவற்றைக் கொடுத்து வாசிக்கச் சொன்னார். அவர் மேல் ஈர்ப்பு ஏற்பட்டிருந்த காலம் அது. வாழ்க்கைப் பயணம் விலகிப் போகவும் மஹரிஷியை மறந்துவிட்டேன். சில நாள்களுக்கு முன்னர் அவரது உடல்நிலை மோசமடைந்தபோது வருத்தம் ஏற்பட்டது. எனது சில நண்பர்கள் அவரது தீவிரப் பக்தர்கள். அவர்களில் ஒரு நண்பர் யோகா மூலம் அடைய முடியாத சித்திகளே இல்லை என்று சொல்வார். ஏதோ ஒருநாள் அவர் கண்ணாடியில் உற்று நோக்கிக் கொண்டிருந்தாராம். கண்ணாடியில் அவரது முகம் மெல்ல மறைந்து வேறொரு முனிவரின் முகம் தெரிந்ததாம். அவருக்கே பயமாகிவிட்டதாம். பின்னொருநாள் நடந்த ஒரு நிகழ்ச்சியில், தான் கண்ணாடியில் கண்ட அதே முனிவரைக் கண்டதாகக் கூறினார் என் நண்பர். இது போன்ற விஷயங்களை நான் எப்போதும் நம்புவதில்லை. இந்த விஷயமும் அப்படியே. ஆனால் மஹரிஷியின் ஆன்மிகக் கருத்துகள் இதுபோன்றவை அல்ல என்று நான் திடமாக நம்புகிறேன். எனது வேறு சில நண்பர்கள் குண்டலினி சக்தியை நெற்றிக்கு ஏற்றிக்கொண்டு, நெற்றியில் நம் சக்தி துடிப்பதைக் காணலாம் எனச் சொல்லிக்கொண்டிருந்தார்கள். நான் அந்தப் பயிற்சிக்குச் செல்லவில்லை. நான் அதிகம் ஈர்க்கப்பட்டது அவரது எண்ணங்களினால்தான். ஆன்மிகத்திற்கும் நிகழ்முறை வாழ்வுக்கும் இடையில் இருக்கும் தொடர்பை விளக்க அவர் சொல்லும் எளிய உவமைகள், சிந்தனைகயைத் தூண்டும் கேள்விகள் பெரிதும் அர்த்தமுள்ளவை, அதிசயத்தில் ஆழ்த்துபவை.

வேதாத்ரி மஹரிஷி மரணமடைந்துவிட்டார். அவரது ஆன்மா சாந்தியடைய பிரார்த்தனைகள்.

8 comments:

Anonymous said...

அவரின் தனிச்சிறப்பே எளிமைதான் ,ஒவ்வெரு முறையும் தியானம் முடிந்ததும் மணதில் ஒவ்வொருவராய் மனைவியில் ஆரம்பித்து நண்பர்கள்,உறவினர்கள் முடிய அனைவரையும் மனதார வாழ்க வளமுடன் என்று வாழ்த்து சொல்ல வேண்டும், கடைசியில் எதிரிகளாய் நினைப்போர், இன்னல் புரிவோர் அவரையும் வாழ்க வளமுடன் என்று வாழ்த்த சொல்லுவார்,எனக்கு ஆரம்பத்தில் இன்னல் புரிவோர் என்று 4 அல்லது 5 பேர் இருந்தனர் பின் போக போக ஒருவரும் இல்லாத நிலை வந்தது. அவரின் வாழ்க்கை வரலாறு புத்தகம் வாழ்க்கையை கஷ்டமாக நினைப்பவர்கள் அனைவரும் ஒரு முறை படித்தால் தெளிவு பிறக்கும்.

சரவணன்.இரா

குமரன் (Kumaran) said...

மகரிஷி அவர்களின் பாதங்களுக்கு என் பணிவான வணக்கங்கள். அவருடைய மறைவு ஒரு பெரும் இழப்பு.

ஜெயஸ்ரீ said...

//பின்னொருநாள் நடந்த ஒரு நிகழ்ச்சியில், தான் கண்ணாடியில் கண்ட அதே முனிவரைக் கண்டதாகக் கூறினார் என் நண்பர். இது போன்ற விஷயங்களை நான் எப்போதும் நம்புவதில்லை. இந்த விஷயமும் அப்படியே. ஆனால் மஹரிஷியின் ஆன்மிகக் கருத்துகள் இதுபோன்றவை அல்ல என்று நான் திடமாக நம்புகிறேன் //

நிச்சயமாக. அவரது ஆன்மீக கருத்துக்களும் அவரது மனவளக்கலை எனப்படும் தியான முறைகளும் அன்றாட வாழ்வுக்கு பயனளிக்கும் முறையில் அமைந்தவை. உடலுக்கும் மனதுக்கும் உள்ள தொடர்பு பற்றியும், எண்ணங்கள் நம் உடலில் ஏற்படுத்தும் மிக நுண்ணிய மாற்றங்கள் குறித்தும் மிக எளிமையாக விளக்கியவை அவரது புத்தகங்கள். அவரது புத்தகங்களைப் படித்த பின்பு அதுவரை புரிந்தே இல்லதா பல விஷயங்கள் புரியத் தொடங்கின.

அன்னாரது ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்.

Muthu said...

//நான் அதிகம் ஈர்க்கப்பட்டது அவரது எண்ணங்களினால்தான். ஆன்மிகத்திற்கும் நிகழ்முறை வாழ்வுக்கும் இடையில் இருக்கும் தொடர்பை விளக்க அவர் சொல்லும் எளிய உவமைகள், சிந்தனைகயைத் தூண்டும் கேள்விகள் பெரிதும் அர்த்தமுள்ளவை, அதிசயத்தில் ஆழ்த்துபவை.//

i second this...this is a great loss surely

Anonymous said...

Á†Ã¢„¢ ´Õ º¸¡ô¾õ!

ÁÉ¢¾ ÌÄò¾¢üìÌ Á†Ã¢„¢ ¬üȢ À½¢ Á¸ò¾¡ÉÐ!«Å÷ ÁÉ¢¾ ÌÄò¾¢üìÌ ÅÆí¸¢Â ÅÃôÀ¢Ãº¡¾õ ±Ç¢Â Ó¨È Ìñ¼Ä¢É¢ §Â¡¸õ. º¡¾¡ÃÉ ÁÉ¢¾÷¸ÙìÌõ ÀÂý ¦ÀÕõ Ũ¸Â¢ø,¯Ä¸ ºÓ¾¡Â §ºÅ¡ ºí¸õ ±ýÈ «¨ÁôÀ¢¨É ÀðÊ ¦¾¡ðʸǢÖõ§¾¡üÚÅ¢òÐ, ¾¢Â¡ÉӨȸ¨Ç À¡ÁÃÕõ ÀÂý¦ÀÚõ §¿¡ì¸ò¾¢ø,¯Â÷ó¾ ±ýÉòмý ÁÉ¢¾ ÌÄò¾¢üìÌ «Å÷ ¬üȢ À½¢ Á¸ò¾¡ÉÐ! þÉ¢ þôÀÊ ´Õ ¾ýÉÄõ ¸Õ¾¡ Á¸¡ý §¾¡ýÚÅ¡÷ ±ýÀÐ ºó§¾¸õ¾¡ý.Å¡ú¸ Á†Ã¢„¢ «Å÷¸Ç¢ý ¦¾¡ñÎ!

Anonymous said...

மஹரிஷி ஒரு சகாப்தம்!

மனித குலத்திற்க்கு மஹரிஷி ஆற்றிய பணி மகத்தானது!அவர் மனித குலத்திற்க்கு வழங்கிய வரப்பிரசாதம் எளிய முறை குண்டலினி யோகம். சாதாரன மனிதர்களுக்கும் பயன் பெரும் வகையில்,உலக சமுதாய சேவா சங்கம் என்ற அமைப்பினை பட்டி தொட்டிகளிலும்தோற்றுவித்து, தியானமுறைகளை பாமரரும் பயன்பெறும் நோக்கத்தில்,உயர்ந்த என்னத்துடன் மனித குலத்திற்க்கு அவர் ஆற்றிய பணி மகத்தானது! இனி இப்படி ஒரு தன்னலம் கருதா மகான் தோன்றுவார் என்பது சந்தேகம்தான்.வாழ்க மஹரிஷி அவர்களின் தொண்டு!

Anonymous said...

'வாழ்க வளமுடன்' என்று அனைவரின் மீதும் அன்பு செலுத்தும் வழியை சொன்னவர். அவர் ஆத்மா சாந்தியடைய என்னுடைய ப்ரார்த்தனைகளும்!!

Anonymous said...

வாழ்க வளமுடன்..வாழ்க வளமுடன்..வாழ்க வையகம் இப்படி வாழ்த்தச்சொன்னார் மஹரிஷி.

உலகமெலாம் பருவ மழை ஒத்தபடி பெய்யட்டும்.. உழவரெல்லாம் தாணியத்தை உவப்புடனே பெருக்கட்டும்.. பல தொழில்கள் புரிகின்ற பாட்டாளி உயரட்டும்.. என எல்லா தரப்பு மக்களும் வாழ வேண்டும் என வாழ்த்துவது அவருடைய மனவளக்கலையின் தினசரி பயிற்சி. அவர் ஏற்றி வைத்த இத் தீபம் அவரது தொண்டர்கள் மூலமாய் உலகெங்கும் பரவி சாந்தி நிலவட்டும்..

நல்ல விதமாய் அஞ்சலி செலுத்தியுள்ளீர்கள்.