Saturday, July 29, 2006

சில புகைப்படங்கள்

கடந்த மாதம் திருப்பதிக்குச் சென்றிருந்தபோது எடுத்திருந்த வெகு சில புகைப்படங்களை வலையேற்ற நினைத்திருந்தேன். இப்போதுதான் முடிந்தது.

கீழ்த்திருப்பதியிலிருந்து திருமலைக்குச் செல்லும்போது கடும் மழை பெய்தது. வளைந்து வளைந்து செல்லும் சாலைகளில் கடும் மழையில் மறைந்துபோன சாலைகளில் பிரயாணித்தது த்ரில்லிங்காகவும் பயமாகவும் இருந்தது. அந்த மழையும் அதைத் தொடர்ந்து எழுந்த காலநிலையும் திருப்பதி சுற்றுலாவை மிகவும் இனிமையாக்கியது.

சில புகைப்படங்கள்.



ராமர் பாதம் காணும் இடத்தில் இருந்து எடுத்த படம். கீழ்த்திருப்பதியைக் காணலாம்.

-oOo-

Raamar pAtham

ராமர் பாதம். வானிலிருந்து கீழிறங்கிவந்த பெருமாளின் பாதம் பட்ட பகுதி என்பது ஐதீகம்.

-oOo-

Photobucket - Video and Image Hosting

சிலைகளின் தோரணம். கற்கள் தானாகவே தோரணம் போல் அமைந்த காட்சி. பல ஆயிரம் வருடங்களுக்கு முந்தையது என்று அங்கிருந்த அறிவிப்புப் பலகை சொல்லியது. வானிலிருந்து கீழிறங்கிய பெருமாள் இங்கேதான் முதலில் தங்கியதாக ஐதீகம் சொல்லுகிறது.

-oOo-

Photobucket - Video and Image Hosting

நாங்கள் தங்கியிருந்த இடத்திலிருந்து தங்கக்கோபுரத்தின் தோற்றம்.

-oOo-

Photobucket - Video and Image Hosting

ஒரு மரத்தின் பிடித்த தோற்றம்.

-oOo-

Photobucket - Video and Image Hosting

ஐந்து மொட்டைகளின் அட்டகாசம்.


-oOo-

அஷ்டே!

6 comments:

Boston Bala said...

சூப்பர் மொட்டைஸ்

துளசி கோபால் said...

அஞ்சு மொட்டைகளும் அழகா அம்சமா இருக்கு.

Anonymous said...

Super, naan 03.04.2007, thirupati ponen nalla tharisanam nanum athigaman photos eduthu irukken
enidamum oru photo iurkku 5 mottaikal, but athu 20 age kku mela

baskar
9360209762

Radha Sriram said...

மொட்டைங்க சூப்பர் !!

Anonymous said...

எல்லாப்படங்களும் நன்றாய் உள்ளது. எல்லா குட்டி மொட்டைகளும் அழகான மொட்டைகள்..

Anonymous said...

மொட்டைகள் அழகு. நல்ல மொட்டைகள்.

ரிஷபன்