முடிவு
இணைகோட்டின்
ஆளுக்கொரு பக்கத்தில் நின்றுகொண்டு
நான் கல்லெறியத் தொடங்கினேன்
நீ எச்சிலை உமிழ்ந்தாய்
சில யுகங்கள் காலச் சுழற்சியில்
நம்மிரு இடங்களும் மாறின
அப்போது நான் எச்சில் உமிழ
நீ கல்லெறியத் தொடங்கினாய்
சில ஹைகூக்கள்
இரண்டு பக்கமும்
திறந்துகிடக்கும் வீட்டில்
மீன் தொட்டி
-oOo-
பறக்கும் காலண்டரில்
கண்ணில் படுகின்றன
கடந்த நாட்கள்
-oOo-
மரம், அதன் நிழல்
சின்னச் சின்னதாய்
வெயில்
-oOo-
அமர்ந்திருக்கும் ஈ
சத்தமின்றி நெருங்கும் பல்லி
ஒலிக்கிறது செல்ஃபோன்
-oOo-
குடைக்குள்ளிருந்து
அழுகிறான் சிறுவன்
காகிதக் கப்பலில் மழை நீர்
-oOo-
மரண வீட்டில்
ஊதுபத்தி
சிரிக்கும் குழந்தைகள்
-oOo-
8 comments:
// மரம், அதன் நிழல்
சின்னச் சின்னதாய்
வெயில் //
அருமை. நிறைய முறை நான் இந்தக் காட்சியைத் தரிசித்திருக்கிறேன். ரசித்திருக்கிறேன்.
அதிலும், மரங்கள் நிறைந்த சாலையில், உச்சி வெயில் சமயத்தின் போது, வாகனங்களை ஓட்டிச் செல்கையில், சாலையின் கறுப்பு வெள்ளை zebra crossings தவற விட்டிருக்கிறேன். அல்லது, சின்ன சின்னத் துளியில் வாகனத்தின் கண்ணாடியில் பெய்யும் வெய்யிலை ரசித்து ஓட்டிக் கொண்டே பிறரிடம் திட்டு வாங்கியிருக்கிறேன்.
சிறிய வரிகளாலான கவிதை மட்டுமல்ல. ஒரு காட்சியை மீண்டும் ஓவியமாக மனத்திரையில் உருவாக்கித் தந்த வரிகள்.
Frame the picture!!!
Thanks Nanban.
//இரண்டு பக்கமும்
திறந்துகிடக்கும் வீட்டில்
மீன் தொட்டி//
நல்ல ஹைக்கூ.
//அமர்ந்திருக்கும் ஈ
சத்தமின்றி நெருங்கும் பல்லி
ஒலிக்கிறது செல்ஃபோன்.//
//மரண வீட்டில்
ஊதுபத்தி
சிரிக்கும் குழந்தைகள்//
நல்ல ஹைக்கூக்கள் ஹரன்ப்ரசன்னா
சுப்ரமணிய சாமி, தேடித் தேடி கமெண்ட் போடுறீங்க. நன்றி. யாரு நீங்கன்னே தெரியலையே!
//பறக்கும் காலண்டரில்
கண்ணில் படுகின்றன
கடந்த நாட்கள்
-oOo-
மரம், அதன் நிழல்
சின்னச் சின்னதாய்
வெயில்
//
அழகான காட்சிகள். நன்றாக உள்ளன.
-------------------
தறுதலை
(தெனாவெட்டுக் குறிப்புகள்-'07)
என் வாழ்க்கை இணையம் முழுவதும் கழிந்து கிடக்கிறது.
மரண வீட்டில்
ஊதுபத்தி
சிரிக்கும் குழந்தைகள்
ஒவ்வொரு ஹைக்கூவும் ஒவ்வொரு கருத்தைச் சொல்லுகின்றது.
பிரமாதமான கவிதைகள் நண்பரே!
ஹைக்கூகள் நன்றாக இருக்கின்றன.
உள்ளபடியே!!
Post a Comment