01. வழி
நிர்ணயிக்கப்பட்ட
சாலைகளில்
பயணம்
அலுப்பாயிருந்தது
வழி தப்பிய தட்டான்
பேருந்துக்குள்
நுழையும்வரை
02. கவிதையைக் கற்பித்தல்
"குழலினிது"
"குழலினிது"
"யாழினிது"
"யாழினிது"
"என்பர்தம்"
"என்பர்தம்"
"மக்கள்"
"மக்கள்"
"மழலைச்சொல்"
"மழலைச்சொல்"
"கேளா"
"கேளா"
"தவர்"
"தவர்"
03. எதிர்பாராத கவிதை
சூரியனருகே
சுற்றிக் கொண்டிருக்கும் பறவை
கீழே நதியோடும்
பாலமொன்றில்
காற்றிலாடும்
கூந்தல் முகம்
சாரல் போல் தெறிக்கும்
நதிநீர்த் திவலைகள்
பேரிருளுக்குள்
கனன்று கொண்டிருக்கும்
கங்கு...
பெரும்பட்டியலில்
தன்னிடத்திற்குக்
காத்திருக்கவில்லை
திடீர் முற்றத்துச் சத்தம்
படபடக்கும் தாளில்
சின்ன சின்ன நீர்த்துளிகள்
04. அமைதி
குழந்தைகள்
காடுகளைப் பற்றி
படித்துக்கொண்டிருந்தார்கள்
அங்கு வந்தன மரங்கள்
கொடிகள் செடிகள்
புதர்கள் விலங்குகள்
பறவைகள் இன்ன பிற
சீறிக்கொண்டோடியது
வேகப் பேருந்து
குழந்தைகள் திடுக்கிட
05. வீடுவிட்டு விளையாட்டு
வீட்டிலிருந்து வெளியேற
உடன் வாங்கிக்கொண்டது
உலகம்
ஆயிரம் பாம்புகள்
கனவெங்கும் துரத்த
மீண்டு
வீடு வந்த போது
புன்னகையுடன்
காத்திருந்தது
கடவுள்
4 comments:
//02. கவிதையைக் கற்பித்தல்
"குழலினிது"
"குழலினிது"
"யாழினிது"
"யாழினிது"
"என்பர்தம்"
"என்பர்தம்"
"மக்கள்"
"மக்கள்"
"மழலைச்சொல்"
"மழலைச்சொல்"
"கேளா"
"கேளா"
"தவர்"
"தவர்"//
தி
ன
தின
ம
தினம
ல
தினமல
ர்
தினமலர்..
இது எனது தம்பியின் வழிமுறை..
//வழி தப்பிய தட்டான்
பேருந்துக்குள்
நுழையும்வரை//
அருமை...
//சீறிக்கொண்டோடியது
வேகப் பேருந்து
குழந்தைகள் திடுக்கிட//
இதென்ன ஹைகூவின் பெருவடிவமா???
ஜெயக்குமார்
1. ஓ.கே. - இதை எழுதப் பிரசன்னா வேண்டுமா என்ற கேள்வியும் எழுகிறது.
2. நுட்பமோ உத்தியோ கவிதையில்லை. மனுஷ்யபுத்திரன் தொகுப்பு ஒன்றிலிருந்து
வெயிலைப் பற்றிய ஒரு கவிதை, வருகிறது, வந்துவிட்டது, உறைக்கிறது என்ற
மாதிரியான வரிகள். அதை எடுத்து மரத்தடியில் போட்டபோது பிரசன்னா, இந்தக்
கவிதையில் என்ன இருக்கிறது என்று கேட்டது நினைவுக்கு வருகிறது.
3. நல்லாயிருக்கு.
4. மாஜிகல் ரியலிசக் கவிதை மாதிரி தெரிகிறது.
5. நல்லா இருக்கு. ஆனாலும் மூன்றையும் ஐந்தையும் படித்தபோது இதேமாதிரி
ஏற்கனவே படித்திருக்கிறோமே என்ற உணர்வைத் தந்தன.
பின்குறிப்பு: தேவதேவனோடு திருப்பூரில் நிறைய நேரம் பேசிவிட்டுப் பின்னர்
அவர் கவிதைகளைப் படித்துவிட்டு, அந்தப் பாதிப்பில் சில இங்கே வந்துள்ள
மாதிரி எனக்குத் தோன்றுகிறது :-)
பெரியவர் பி.கே.எஸ்.சொல்வதையெல்லாம் கணக்கில் எடுக்க வேண்டாம்.உங்களுக்கு கவிதை எழுத வருகிறது.விடாமல் பிடித்து எழுதுங்கள்.வாழ்த்துக்கள்.
கருத்து சொன்ன அனைவருக்கும் நன்றி.
Post a Comment