ஆடும் பொம்மைக்கு
தான் சாவி கொடுக்கவில்லை என்றான் என் மகன்
பொம்மைக்கும் தனக்கும்
சம்மந்தமே இல்லை என்கிற பாவனையில் என் மனைவி
அம்மாவிடம் கேட்டால்
தான் அந்த பொம்மையை கண்டதே இல்லை என்பாள்
எப்போது நம் வீட்டிற்கு வந்தது என்று
எதிர்க்கேள்விகூட கேட்கலாம்
மூன்று பேரும் சத்தியம் செய்யவும் தயாராக இருக்கிறார்கள்.
அப்பா ஃபோட்டோவில் இருப்பதால்
அவரை கேள்விகள் கேட்க நியாயம் இல்லை.
நானே என்னைச் சந்தேகப்பட முடியாது.
மௌனச் சிரிப்புகளுக்கிடையில்
சத்தமெழுப்பி
ஆடும் பொம்மைகள் ஆடிக்கொண்டிருக்கின்றன.
7 comments:
நல்லா வந்திருக்குங்க கவிதை.
அமானுஷ்யமோ? இல்ல யாரும் அற்ற ஒரு ஷனத்தில் அனைவரும் கணிமைத்த அந்த ஒரு நொடியில் பொம்மை தனக்குத்தானே சாவி கொடுத்துக்கொண்டிருக்கலாம்!
சிறு மர்மத்துடன் ஆர்வத்தைக் கிளறுவதாகவும், வசீகமாகவும் இருக்கிறது.
அனுஜன்யா
Really a Good one.
Jayakumar
ஹரன்பிரச்சனா,
தங்களிடம் அனுமதி பெறாமல் தங்கள் கவிதையின் பண்முக புனைவாக ஒரு கட்டுரை பதிந்துள்ளேன். வாசித்து பார்த்து பின்னூட்டம் தருக.
http://minnalpakkam.blogspot.com/2008/11/blog-post_17.html
நன்றி,
மின்னல்
என்னிடம் சொன்னதற்கு நன்றி மின்னல்.
கட்டுரை வாசித்தீர்களா? முடிந்தால் மடலிடுங்கள்
Post a Comment