இரா. முருகனைப் பார்த்தால் எனக்கு ஏதோவொரு பழைய படத்தின் வில்லன் போலத் தோன்றுகிறார். அவரிடமே இந்தப் புகைப்படம் இருக்குமா எனத் தெரியவில்லை.
சு.ராவைப் பார்த்தால் பழைய மலையாளப் படத்தில் வரும் ஒரு நடிகர் போலத் தோன்றுகிறார்.
க்ரியா ராமகிருஷ்ணன் வாயிலிருக்கும் சிகரெட்டைப் பற்றவைக்கும் வெங்கட் சாமிநாதன் - அந்தப் புகைப்படம்தான் எவ்வளவு இயற்கை!
நீல. பத்மநாபன் எழுத்தாளருக்கு உரியதாகக் கருதப்படும் சர்வ லட்சணங்களுடன் பொருந்திப் போகிறார்!
வில்லன் நடிகர் போன்றிருக்கும் இரா. முருகன்
மௌனி, வெங்கட் சாமிநாதன்
கிருஷ்ண ஐயர்
மௌனி, வெங்கட் சாமிநாதன்
மௌனி
மௌனி
பிரமிள், முத்துசாமி
பிரமிள், முத்துசாமி
கே.வி. சுப்பண்ணா
சி.சு. செல்லப்பா, வெங்கட் சாமிநாதன்
மலையாள நடிகர் போன்று தோற்றமளிக்கும் சுந்தர ராமசாமி.
வெங்கட் சாமிநாதன், பிரமிள்
வெங்கட் சாமிநாதன், க்ரியா ராமகிருஷ்ணன்
வெங்கட் சாமிநாதன், தி.ஜானகிராமன்
வெங்கட் சாமிநாதன், மௌனி
வெங்கட் சாமிநாதன், மௌனி
வெங்கட் சாமிநாதன், தி.ஜானகிராமன்
நீல பத்மநாபன்
தி.ஜானகிராமன்
சே. ராமானுஜம்
10 comments:
WOW. A post to treasure
அருமையான பதிவு....மிக்க நன்றி ஹரன் பிரசன்னா
இந்த வலைப்பதிவின் தலைப்பிற்கு பொருத்தமானதொரு பதிவு. 'எவற்றின் நடமாடும் நிழல்கள் நாம்?' என்கிற நகுலனின் வரி நினைவுக்கு வருகிறது. புகைப்படங்களை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.
//நீல. பத்மநாபன் எழுத்தாளருக்கு உரியதாகக் கருதப்படும் சர்வ லட்சணங்களுடன் பொருந்திப் போகிறார்!//
:-)
கையில் பேனாவை வைத்துக் கொண்டு மோட்டுவளையை வெறிக்கப் பார்த்துக் கொண்டு போஸ் கொடுப்பதுதான் அங்கீகரிக்கப்பட்ட எழுத்தாள சம்பிரதாயம்.
பிரசன்னா காலவெளியில் அப்படியே பின்னால் கொண்டு சென்று விட்டீர்கள். பொலிட்டிக்கல் அஜெண்டாக்கள் இல்லாத இலக்கியக்கர்த்தர்கள், இலக்கிய விமர்சகர்கள். சுந்தர ராமசாமியின் படத்தை பார்க்கும் போது மனதை ஏதோ செய்கிறது. பின்னாட்களில் அவர் இழந்துவிட்ட பலவற்றை அந்த படம் காட்டுகிறது. வெங்கட் சாமிநாதனிடம் ஒருவித இறுக்கம் அவரது சிரிப்புகளையும் மீறி இருக்கிறது. ஒருவித கண்டிப்பான வாத்தியார்தன்மை. அவரது ஆளுமையில் கலந்துவிட்ட ஒன்று போல. பிரமிளின் படம் அவரது திரிந்துபோன சாத்தியங்களை முன் கூறுவது போன்றதோர் உணர்வு. 1970களின் புகைப்படங்களிலிருந்து 2000த்தின் முதல் பத்தாண்டுகளின் சூழ்நிலையைப் பார்க்கும் போது நாம் எதையோ இழந்திருக்கிறோம் என தோன்றுகிறது. வணிகமயமான சிற்றிலக்கிய சூழல்.அச்சூழலின் வர்த்தக-அரசியல் இலாபம் கொண்ட நிலைப்பாடுகள். மௌனியின் மெலிந்த தேகத்தின் மொழி நம்மை பார்த்து எள்ளி நகையாடுவது போல இருக்கிறது. பகிர்ந்தமைக்கு நன்றி.
இதுவரை கேள்விப்படிருந்த மௌனி மற்றும் பிற இலக்கிய ஆளுமைகளின் படங்கள் கானக்கிடைத்தது... பகிர்ந்துகொண்ட உங்களுக்கும் பாதுகாப்பாய் வைத்திருந்த வெங்கட்சாமிநாதன் அவர்களுக்கும் நன்றி..
ஜெயக்குமார்
What a visual treat ! Thanks for sharing with us.
/'எவற்றின் நடமாடும் நிழல்கள் நாம்?' என்கிற நகுலனின் வரி நினைவுக்கு வருகிறது. /
இதை எழுதியது மௌனியில்லை?
ஜ்யோவ்ராம் சுந்தர், அது மௌனிதான். நகுலனில்லை. ‘அழியாச் சுடர்’ கதையில் வரும் வரிகள் அவை.
பிரசன்னா / ஜ்யோவ்ராம் சுந்தர்,
அது மெளனியின் வரிகள்தாம். தவறாக குறிப்பிட்டுவிட்டேன். தவறான தகவலுக்கு மன்னிக்கவும்.
இரா. முருகனைப் பார்த்தால் எனக்கு ஏதோவொரு பழைய படத்தின் வில்லன் போலத் தோன்றுகிறார்.
Cross-chek with him :).
Krishnaiyer was one of the pioneers in theatre and dance in those days.He had played female
roles and was a supporter of
reviving Sadir as Bharathanatyam.
Post a Comment