Thursday, January 29, 2009

நீராம்பல் - கவிதை

பதிவு வகை: கவிதை

நீராம்பல்


கிளி தன் எஜமானனுக்காகக் கத்தியது
ஒரு நெல்லை அவன் தட்டவும்
ஒரு சீட்டை எடுத்தது
அவன் கட்டை விரலைத் தேய்க்கவும்
கூண்டுக்குள்ளே சென்றது
மரத்திலிருந்து பார்த்துக்கொண்டிருக்கும்
பூனையைப் பற்றி அதற்குத் தெரியவில்லை
எல்லாரும் அதை வியந்தார்கள்,
அதுவும் கிளிக்குப் புரியவில்லை
அடுத்த நெல்லுக்காகக் கிளி காத்துக்கொண்டிருந்தது
கிளியின் கூண்டுக்கு வெளியே
எல்லையற்ற வானம்
கிளியறியாமல் கரைந்துகொண்டிருந்தது

4 comments:

ஆதித்தன் said...

நல்ல கற்பனை. இங்கே கிளி ஒரு சராசரி மனிதனின் உருவகமாக உள்ளது.

anujanya said...

//எல்லையற்ற வானம்
கிளியறியாமல்
கரைந்துகொண்டிருந்தது//

காட்சியிலிருந்து கவிதையானது இந்த வரிகளில்.

அனுஜன்யா

Anonymous said...

மிகவும் நன்றாக உள்ளது - பூபதி

சந்திரமௌளீஸ்வரன் தமிழ்ப் பக்கம் said...

ஹரன்,

//கிளி கரைந்து கொண்டிருந்தது//

இந்த வரியைத் துறந்து படித்தால்

கவிதை இருக்கு

அந்த வரியைச் சேர்த்தால் கவிதை கரைந்து விடுவதாய்த் தோன்றுகிறது

நீண்ட இடைவெளிக்குப் பின் உங்களின் கவிதைகள் - இருந்தாலும்
உங்கள் சாயல் தவறவில்லை