Thursday, March 12, 2009

இரண்டு கவிதைகள்

பதிவு வகை: கவிதை

தெரு

அதிகாலையின் நிசப்தத்தில்
நீண்டும் சிறுத்தும்
இருவழி திறந்தும் ஒருவழி மூடியும்
அலைந்து நெளியும் என் தெருவில்
பரவி நிலைத்துக் கிடக்கும்
இருளில்; ஒளிவெள்ளத்தில்
விரவியிருந்தன பல வீடுகளின் குரல்கள்
கடையைத் திறக்கும் கதவுச் சத்தத்தில்
கலைந்தோடும் நினைவுகளைச் சுமந்தபடி
புலரும் பொழுதின் நினைவுக் குமிழ்களில்
என்னைத் தேடிக்கொண்டு கடந்தபோது
அடுத்த தெரு வந்துவிட்டிருந்தது.


ஒரு தற்கொலையும் கொலையும்

ஒரு குரல் என்னை எழுப்பியது
அக்குரல் என்னை தூண்டியது
யோசனையைக் கைவிடச் சொல்லி
சில முடிவுகளைச் சொல்லிச் சென்றது
ஒவ்வொன்றையும் செய்துமுடிக்க முடிக்க
அடுத்தடுத்த குரல்கள் எழுந்துகொண்டே இருந்தன
யோசிக்கத் திராணியற்ற,
ஆனால் என்றேனும் ஒருநாள் எழந்தே தீரும்
என் குரல்
உங்களைத் தூண்டும்போது
குற்றசசாட்டுக் குறிப்புகளோடு வந்து நிற்பவர்களுக்கு
சமர்ப்பிக்கிறேன் என்னை எழுதிச் செல்லும் இக்குரலை.

8 comments:

Anonymous said...

தலை நீங்களுமா, இப்பதான் எஸ்.ரா. பாடு புஜ்ஜி பாடுன்னு ஒண்ணை பார்த்தேன், உங்களை இனிமே செல்லமா புஜ்ஜின்னா கூப்பிடலாமா ?

கருப்புசாமிகுத்தகைதாரர் said...

ஐயோ கவிதையா? திரும்பவுமா? ஏன்யா ஆளாளுக்குக் கொல்றிங்க? உங்க மேலல்லாம் தேசிய பாதுகாப்புச் சட்டம் பாயாதா?;-)

ஹரன்பிரசன்னா said...

எல்லா முகமூடிகளும் ஒரு மார்க்கமாத்தான் அலையறீங்க...

anujanya said...

எனக்குப் பிடிச்சிருக்கு ஹரன்; குறிப்பாக இரண்டாவது.

அனுஜன்யா

Anonymous said...

குரலு கூப்பிட்டா
உரலு கிடைச்சா
அவல(ள) இடிச்சா
உனக்கு படைச்சா
உயிர எடுத்தா - தலை இத்தயும் கவுஜல போடுங்க, குரலு கூப்பிட்டா ஆபீஷாண்ட இருக்கிற ஆயாட்ட போயி 2 இளநீ குடிச்சுட்டு வேலையே பார்ப்பீரா, என்னதான் சுதந்திரமான ஆபிஷ்னாலும் பாயபிராணடுனா கூடவா கேட்கமாட்டாங்க..

கிழக்கு புத்தகமா படிச்சா இப்படித்தான் கிறுக்கச் சொல்லும், அப்புறம் கல்யாண காட்சிஆச்சுன்னா சரியா பூடும், அதுவரைக்கும் குரல வெளியே விடாதீகப்பூ..

Anonymous said...

ஏண்ணே இப்படியெல்லாமாண்ணே கவித எழுதுவாங்கே !

இப்ப என்ன ஆச்சு Gentle man ?

டேய் அடங்கவேமாட்டீங்களா ? உன்ன court ல கொண்டி நிறுத்த

Anonymous said...

முகமூடிகள் ’மார்க்கமாக’ செல்கிறார்கள் என்று விளித்து தூவேசம் செய்யும் ’தலீவனின்’ இணையச் சேவையை அறுப்போம். தமிழகமே வெகுண்டெழுந்தது இதனைக் கண்டு..!!!

நாட்டில சட்டம் ஒழுங்கே கெட்டுப்போச்சுங்க, கவிதையே விமர்சனம் பண்ணுறது கூட அனானியா வரவேண்டியதிருக்கு பாருங்க

குருஷி ’முகமூடி’ ஆசிரமம்
பாப்பாகுடி விலக்கு
உசிலம்பட்டி

கவிதைக்காக உயிரையும் கொடுப்போம் என மறைந்திருந்து சொல்வோர் சங்கம் said...

என்னது பாப்பாகுடி விலக்கா??

அதுவும் உசிலம்பட்டியிலா??

சரி இருந்துட்டுப் போங்க..

இப்படிக்கு,

கவிதைக்காக உயிரையும் கொடுப்போம் என மறைந்திருந்து சொல்வோர் சங்கம்...

பல்கலை நிறுத்தம்,
மதுரை காமராசு பல்கலைக் கழகம்
மதுரை, தமிழ்நாடு.