28 மே 2009, வியாழக்கிழமை, மாலை 6.00 மணிக்கு “பன்றிக் காய்ச்சல், பறவைக் காய்ச்சல்” பற்றி மருத்துவர் புருனோ மஸ்கரனாஸ், கிழக்கு மொட்டை மாடிக்கூட்டத்தில் பேசுகிறார்.
கடந்த சில வாரங்களில் பன்றிக் காய்ச்சல் (Swine Fever) என்பது பற்றி நிறையக் கேள்விப்பட்டிருப்பீர்கள். மனிதர்களைத் தாக்கும் A (H1N1) வகை இன்ஃப்ளூயென்ஸா வைரஸ், மெக்சிகோ நாட்டில் பலரைப் பீடித்தது. அங்கிருந்து பரவி இன்று உலகில் பல நாடுகளில் 10,000 பேருக்கும்மேல் இந்த வைரஸ் தாக்கியுள்ளது என்று உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது.
நம் அரசும் பத்திரிகையில் நிறைய விளம்பரங்களைச் செய்கிறார்கள். தமிழகத்தில் இரண்டு பேரை இந்த வைரஸ் பீடித்துள்ளது என்கிறார்கள். இந்தக் காய்ச்சல் pandemic என்று சொல்லப்படக்கூடியது. இது சட்டென்று பரவி, நாட்டின் ஒரு கோடியிலிருந்து இன்னொரு கோடி வரை செல்லக்கூடியது. பல நாடுகளுக்கும் செல்லக்கூடியது.
இதைக் கண்டு நாம் பயப்படவேண்டுமா? இந்த வைரஸ் எப்படி மனிதர்களை பாதிக்கிறது? இதனைத் தடுக்கமுடியுமா? ஏன் பரவுகிறது? நாம் என்ன தடுப்பு முயற்சிகளைக் கையாளவேண்டும்? தனி மனிதர்களாகிய நாம் என்ன செய்யவேண்டும்? மருத்துவர்கள் என்ன செய்யவேண்டும்? அரசு என்ன செய்யவேண்டும்?
இப்படிப்பட்ட பல கேள்விகளுக்கும் விடை சொல்லப்போகிறார் மருத்துவரும் பிரபல வலைப்பதிவருமான புருனோ.
தவறாமல் கலந்துகொள்ளுங்கள்.
”பன்றிக்காய்ச்சல் மனிதனுக்கு ஏன் வருகிறது?” என்பது போன்ற ஆழமான கேள்விகளுடன் வருபவர்கள் அனைவருக்கும் என் நன்றி.
3 comments:
//கிழக்கு மொட்டை மாடியில் பன்றிக்காய்ச்சல்! //
என்னது! கிழக்கு மொட்டை மாடியில் பன்றிக் காய்ச்சலா? தகவலுக்கு நன்றி. அதனால்தான் அந்தப் பக்கம் நான் வருவதே இல்லை. மொட்டை மாடியின் வடக்கில் அமர்ந்தால் இதை தவிர்க்கலாமோ?.
[சும்மா! நிகழ்வு உபயோகமான முறையில் அமைய வாழ்த்துகள்]
ஒரு உலகத்திரைப்பட டிவிடியைக் கையில் கொண்டு வாருங்கள். எதுவும் உங்களை அண்டாது.
//ஒரு உலகத்திரைப்பட டிவிடி//
'babe'என்றொரு கொண்டாட்டமான படமொன்றிருக்கிறது. அது பொருத்தமாக இருக்கும் என நினைக்கிறேன்.
Post a Comment