Thursday, April 15, 2010

ஏ.ஆர். ரகுமானின் பேட்டியும், நிறுத்தப்பட்ட எனது கமெண்ட்டும்

இந்த சிறிய விஷயத்தை ஒரு பதிவாகப் போடுவதற்கே அசிங்கமாகத்தான் உள்ளது. ஆனாலும் பதிந்து வைப்போம் என்பதற்காக இதனைப் போட்டு வைக்கிறேன்.

ஏ.ஆர். ரகுமானின் பேட்டி உதயம் என்ற வலைப்பதிவில் (http://kalyanje.blogspot.com/2010/04/blog-post.html) வெளிவந்திருந்தது. வாசித்துவிட்டு, நேற்று முன் தினம் நான் ஒரு சிறிய கமெண்ட்டைப் போட்டேன். பேட்டி குறித்த நெகடிவ் கமெண்ட் அது. அது அங்கு வெளியிடப்படவில்லை. அந்த கமெண்ட்டைப் போய் ஏன் நிறுத்தப் போகிறார்கள் என்று நினைத்து நேற்று மீண்டும் இன்னொரு கமெண்ட் போட்டேன், எனது கமெண்ட் ஏன் வரவில்லை ஏதேனும் தொழில்நுட்பப் பிரச்சினையா என்று கேட்டு. அதுவும் இதுவரை வெளிவரவில்லை.

நான் போட்ட கமெண்ட்டுகளைச் சேமித்து வைத்துக்கொள்ளவில்லை. நான் போட்ட முதல் கமெண்ட் இப்படி இருந்தது.

நல்ல காமெடியான பேட்டி. ஏ.ஆர். ரகுமான் இவ்வளவு மோசமாகப் பேட்டி கொடுத்து இதுவரை நான் பார்த்ததில்லை.

//தமிழில் எதிர்பார்ப்பு மிகவும் அதிகமாக இருக்கிறது. அதற்கேற்ற மாதிரி படம் இல்லையென்றால், படம் ஃபிளாப் ஆகிறது. படத்திற்குப் பதிலாக ஆல்பம் பண்ணலாம். படம் பண்ணும்போது என்னாகிறதென்றால், பாட்டு நன்றாக போட்டுக்கொடுத்துவிட்டு ஒரு எதிர்பார்ப்பையும் கிளறி விட்டுவிட்டபின் தியேட்டருக்கு வந்து பார்த்துவிட்டு திட்டிவிட்டுப் போகிறார்கள். ‘ஏன் இந்தாளு இந்தப்படத்துக்கு மியூசிக் போட ஒத்துக்கிட்டாரு, இவனை நம்பி படம் பார்க்க வந்தால், இது என்ன இப்படி இருக்கு?’ என்று கேட்கிறார்கள். அப்படியல்லாமல், இந்த எதிர்பார்ப்புகளுக்கு ஈடுகொடுக்கும் படம் கிடைத்தால் கண்டிப்பாகத் தமிழில் படம் பண்ணுவேன். நான் பட்ஜெட் பற்றிப் பேசவில்லை. ஐடியா பற்றிப் பேசுகிறேன். நூறு கோடியில்தான் படம் பண்ண வேண்டும் என்றில்லை. ஒரு கோடியிலும் இருக்கலாம். பத்து லட்சத்திலும் இருக்கலாம். ஆனால், புதிதாகப் பார்வையாளர்களுக்கு ஏதாவது வேண்டும்.//

சரி, கேட்டுக்கிட்டோம்.

இதுதான் நான் போட்ட முதல் கமெண்ட், ஏறக்குறைய இப்படித்தான் இருந்தது.

இரண்டாவதாக நான் போட்ட கமெண்ட், ஏறக்குறைய இப்படி.

நான் போட்ட கமெண்ட் வெளிவரவில்லை. ஏதேனும் தொழில்நுட்பப் பிரச்சினையா அல்லது மட்டுறுத்தலா?

இதுவும் வெளிவரவில்லை.

ஏ.ஆர். ரகுமானின் பேட்டி மீது வைக்கப்படும் மிக மேலோட்டமான குற்றச்சாட்டுக்கூட வெளியிடப்படாமல் ஏன் இருக்கவேண்டும்? அந்த அளவுகூட எதிர்ப்பை விரும்பவில்லை பதிவர் என்பது தெரியவில்லை. திரைத்துறையில் இருப்பதால் அதீத கவனம் எடுத்துக்கொள்கிறாரோ என்னவோ. அல்லது பாராட்டுகள் மட்டும் காதில் கேட்டால் போதும் என்கிற எண்ணமா எனத் தெரியவில்லை.

எல்லாம் அவன் செயல்!

7 comments:

பாலாஜி சங்கர் said...

எனக்கும் இதே சிந்தனை தோன்றியது
அனால் சொல்லவில்லை

தமிழ்ச்செல்வன் said...

ஏ.ஆர். ரஹ்மான் சொன்னதில் எந்த தவறும் இருப்பதாகத்தெரியவில்லை.

இப்போது தமிழில் வரும் அநேக படங்கள் மாற்று மொழியிலிருந்து காப்பி அடித்த படங்களே.

ஆனாலும் தங்கள் பின்னூட்டத்தை சில நோக்கத்திற்காக எடுத்திருந்தால் அது தவறுதான்

Unknown said...

எதிர் கருத்து என்றாலே எதிரி கருத்து என்று ஆகிவிட்ட நிலையின் நீட்சிங்க இது.

ஆம்பூர் எட்வின் / பிரபஞ்சப்ரியன் said...

உதித் நாராயணன் போன்ற தமிழ்க் கொலைஞர்களை அறிமுகப்படுத்தியதில் என்னப் பெருமை வேண்டியுள்ளது? ஏதோ சிலப் படங்களுக்கு ( அன்பே சிவத்தில் மாதவனுக்கு...) வேண்டுமானால் அது தோதுப்படலாம். ஆனால் எல்லாப் படங்களிலும் அதை எப்படிப் பொறுத்துக்கொள்ளுவது? அதிலும் அந்த ஆளை, நம்ம TMS, SPB, P.சுசிலா போன்றோருடன் நிறுத்திப் பார்க்கும் மனோபாவத்தை எந்த வகையில் சேர்ப்பது? அவரின் சொந்தக்கார இளைஞர் இசை அமைத்திருக்கும் 'மதராசப் பட்டணம் ' என்ற 1947 ம் வருடக் கதையுள்ள படத்தில் உதித் பாடியுள்ள ஒருப் பாடலே அந்த படத்திற்கு மைனஸ் பாயிண்டாக இருக்கப்போகிறது பாருங்கள்.

Anonymous said...

ரஹ்மானின் பேட்டியைப்பற்றிய உங்கள் கருத்து நியாயமானதே என்று நீங்கள் நினைக்கும் பட்சத்தில் இந்தப்பேட்டியை ஏன் மட்டமான பேட்டி என்கிறீர்கள் என்பதன் காரணங்களை உங்கள் பதிவில் இடுவதே சரியாக இருக்கும் என நினைக்கிறேன்.தவிர,உங்கள் பின்னூட்டம் நீக்கப்பட்டதைப் பெரிதுபடுத்துவது வேண்டாமே!

syed mohammed said...

yei dubukku, naan A.R.Rahman peyttya padichean, nee comment pannamathiri oru punnakkum illa, moodittu unnudaya padhiva mattum paaru, illenaa innum asingama comment varum, mavane.

thatswhyiamhere said...

ஏ.ஆர். ரஹ்மான் சொன்னதில் எந்த தவறும் இருப்பதாகத்தெரியவில்லை.