Sunday, September 26, 2004

பழைய போட்டோ - கவிதை


கருப்பு-வெள்ளை வழுக்கைத்தலையரின்
விவரம் தெரியவில்லை யாருக்கும்
அம்மா யோசித்துக்கொண்டேயிருக்கிறாள்
அவர் சவால் விட்ட மேனிக்கு
கைகளைக் குறுக்கக் கட்டி
ஒரு சிரிப்பையும் சிந்தி.
முன்னும் பின்னும் தேடியதில்
ஒரு விவரம், மித்ரா ஸ்டூடியோ.
அம்மா முனகினாள்
அவர் வீட்டிலேயே மறந்திருப்பார்களென
மறுநாள் ·பிரேம் போட்டு
நடுக்கூடத்தில் மாட்டி வைத்தேன்
அம்மா மித்ரா ஸ்டூடியோவின்
நினைவுகளைச் சொல்லத் தொடங்கினாள்.

10 comments:

Anonymous said...

À¢ÃºýÉ¡, ¦Áö¡¸§Å µ÷ ±ø¨Ä¨Â þó¾ì¸Å¢¨¾Â¢§Ä ¦¾¡ðÊÕ츢ýÈ£÷¸û. ±ý¨Éô ¦À¡Úò¾Å¨Ã ¸Å¢¨¾ ±Øи¢ýÈÅ÷¸¨Çô ¦À¡È¡¨ÁôÀ¼¨ÅìÌõ ¸Å¢¨¾ þÐ. Å¡úòиû.
-/þÃÁ½¢¾.

Anonymous said...

உங்கள் வாழ்த்துக்கு நன்றி இரமணீ. -ஹரன்பிரசன்னா

Anonymous said...

«ýÒ ¿ýÀ¡,

þÐ «¨ÉÅÃРţðÊÖõ «Åº¢Âõ ²§¾Ûõ ´Õ ºó¾÷ôÀò¾¢ø ¿¢¨É× ÜÈôÀðÎ À¢ýÉ÷ «Ð§Å º¢Ã¢ôÒõ ÜòÐÁ¡ö Á¨ÈÔõ.

«õÁ¡ ¿¢ò¡ ŠÎʧ¡Ţý ¿¢¨É׸¨Ç ¦º¡øÄò¦¾¡¼í¸¢É¡û..

þÐ ¿¡õ þÆó¾ «øÄÐ «õÁ¡ì¸û ¬¨ºÔ¼ý ¿¢¨É× ÜÚõ «ÅÇÐ Ó¾ø ¾¢ÕÁÉ §À¡ð§¼¡ ±Îò¾ þ¼Á¡¸ «øÄÐ Å¡ú쨸¢§Ä§Â ±Îò¾ Ó¾ø §À¡ð§¼¡ ŠÎʧ¡š¸ þÕìÌõ.

¿øÄ ÓÂüº¢. Å¡úòÐì¸û †Ãý ôúýÉ¡..

¦ƒÂìÌÁ¡÷ - ÁŠ¸ð.

Anonymous said...

nanru prasanna
prakash

Anonymous said...

கவிதை நன்ரு ப்ரசன்ன
-ப்ரகஷ்

Anonymous said...

கவிதை நன்ரு ப்ரசன்னா.
-பிரகாஷ்

Anonymous said...

டாக்டர் பிரகாஷ், ஏற்கனவே ஒரு இகாரஸ் பிரகாஷ் இருக்கிறார். அதனால் நீங்கள் டாக்டர் பிரகாஷ் என்று எழுதவும். டாக்டர் பிரகாஷ் என்ற பெயர் ஒரு மாதிரி இருந்தாலும், போகப் போக பழகிவிடும்.

நண்பர்களுக்கு, இந்த டாக்டர் பிரகாஷ் ஐயோ பாவம். :-) என் நண்பர். என் வெல்-விஷர்களில் ஒருவர். இலக்கியத்தில் கொஞ்சமே கொஞ்சம் ஆர்வம் உள்ளவர். இவரை "அந்த டாக்டர் பிரகாஷுடன்" போட்டுக் குழப்பிக்கொள்ள வேண்டாம்.

உங்கள் கருத்துக்கு நன்றி டாக்டர் பிரகாஷ்.

பை தி பை, இந்தக் கருத்தை உள்ளிட்டது டாக்டர் பிரகாஷ்தானே? இகாரஸ் பிரகாஷ் இல்லையே? இருக்கும் பிழைகளைப் பார்த்தால் டாக்டர் பிரகாஷாகத்தன் இருக்கவேண்டும் என நினைக்கிறேன். இப்போதுதான் தமிழில் தட்டச்சு செய்யத் தொடங்குகிறார். தொடரவும்.

அன்புடன்
ஹரன்பிரசன்னா

Anonymous said...

பழைய போட்டோ கவிதை மிகவும் நன்றாக இருந்தது.எங்கள் வீட்டிலும் இத்தகை சம்பவங்கள் நடந்திருக்கிறது.அதை உங்கள் கவிதை நினைவுபடுத்துயது.ஆனால் கவிதையில் பிரேம் போட்டு மாட்டியதாக வருகிறது.எங்கள் வீட்டில் அந்த நல்ல காரியத்தை செய்த புண்ணியவான் குப்பைத்தொட்டியில் அதை போட்டுவிட்டார்.வீட்டில் அதை பற்றி பேசும்போது நிச்சயம் அவருக்கு புகழ் மாலைகள் விழும்........

Anonymous said...

Very Nice

Anonymous said...

Anonymous, thanks. But who are you? :-)
--Prasanna