Thursday, February 1, 2007

யாருமற்ற பொழுது - கவிதை

யாருமற்ற இரவின் பொழுதொன்றில்
பெண்ணொருத்தியை நினைத்தேன்
பின் மகனை நினைத்தேன்
என்றோ செய்த
பயணமொன்று நிறுவியிருந்த
பயத்தைப் பற்றியும்.
காலையில் கண்ணில் பட்டு
ஒரு நொடியில் மறைந்துவிட்ட
கண்ணாடியின் பிரதிபலிப்பைக் கொஞ்சம்.
உடலின் தசைகள் முறுக்கேற,
மகன் நடுவீட்டில் இருந்த
சிறுநீரில் கையளப்பி ஓசை எழுப்ப,
அடிவயிறு கௌவிக்கொள்ள,
கண் கூசும் பிரதிபலிப்பில்
வீடெங்கும் நிறைந்து கிடக்கின்றன
அவ்வவற்றிக்கான மனப்பிரதிமைகள்.

2 comments:

Anonymous said...

Á¢¸ ¿øÄ ¸Å¢¨¾.
¯½÷¸¨Ç ¿ýÈ¡¸ ¦ÅÇ¢ôÀÎò¾¢ÔûÇ£÷¸û.

«ýÒ¼ý
¸¢Ã¢
http://rgiri.livejournal.com

Anonymous said...

காற்று
திரும்பத் திரும்ப இசைத்தது
தொடர்ந்து அந்த வார்த்தையைச் சொல்லி

மகனின் இருப்பை
மகளின் அன்பை
மற்றும்
மரபின் வீச்சை

மாலையில் வந்து சென்ற இன்னுயிரை
பின்னிரவில் வந்த
பின்னிருந்து அணைத்து மறைந்ததை
கொளுத்திப்போட்டுச் சென்ற
அழியா நினைவை

மனமெங்கும் பேரமைதியைக் கலைத்து
மௌனமாய் இசைத்துப்
பரப்புகிறது காற்று ஒலியின் அலையை


அன்புடன்
மதுமிதா