என்னுடைய மொபைல் நோக்கியா ஈ 71. இதில் தமிழில் படிக்க ஒபேரா சிறிய உலாவியினைப் பயன்படுத்துகிறேன். இதையும் முழுத்தீர்வு என்று சொல்லமுடியாது, ஆனால் சிறந்த தற்காலிகத் தீர்வு. அதேபோல் எஸ் எம் எஸ் தமிழில் அனுப்ப, வரும் தமிழ் எஸ் எம் எஸஸைப் படிக்க வழி இல்லாமல் திண்டாடிக்கொண்டிருந்தபோது இது கண்ணில் பட்டது. மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.
ஈ 71ஐத் தவிர எந்த மொபைல்களில் இது வேலை செய்கிறது என்பதெல்லாம் தெரியாது. தேவைப்பட்டவர்கள் முயன்று பார்க்கவும். இதிலிருந்து தமிழில் எஸ் எம் எஸ் அனுப்பினால், தமிழ் ஏற்கெனவே உள்ள மொபைல்களில் நேரடியாகப் படிக்க இயலும். அப்படி தமிழ் ஏற்கெனவே இல்லாத தமிழ் மொபைல்களில் இந்த Indisms என்னும் அப்ளிகேஷனை நிறுவினால் மட்டுமே படிக்க இயலும்.
இதிலுள்ள குறை, இதனைப் பயன்படுத்தி மெயில் அனுப்ப வசதி இல்லாதது. குறைந்தபட்சம் காப்பி & பேஸ்ட் வசதியாவது இருந்திருக்கலாம். அதுவும் இல்லை. எனவே இப்போதைக்கு எஸ் எம் எஸ்ஸுக்கு மட்டுமே பயன்படுத்திக்கொள்ளலாம்.
ஃபொனடிக் தமிழ்தான். ஆனால் நாம் பயன்படுத்தும் கீபோர்டைப் போல் அல்லாமல் சிறிய மாற்றங்களுடன் உள்ளது. மெல்லப் பழகிக் கொள்ளலாம் என நினைக்கிறேன். அதன் உதவி பக்கத்திலேயே என்ன என்ன கீ என்ன என்ன எழுத்தைத் தரும் என்கிற விவரமெல்லாம் உள்ளது.
எனது மொபைலுக்கு ஒரு நல்ல தீர்வு இது. மற்ற பைல்களுக்கு-? தெரியவில்லை. இதன் மற்ற நிறை குறைகளை கிருபா, நாகராஜன் போன்ற பெரியவர்கள்தான் சொல்ல்வேண்டும்.
Indisms அப்ளிகேஷனை தரவிறக்க http://www.getjar.com/mobile/18661/indisms/
6 comments:
மிக்க நன்றி நண்பரே. நான் Nokia 6600 (30.12.2004) மொபைலைப் பயன்படுத்தி வருகிறேன். நீங்கள் தெரிவித்த இந்த application-ஐ நான் பயன்படுத்தி பார்த்தேன். தமிழ் மொழி மிகவும் அருமையாக வேலை செய்கிறது. நீங்கள் கூறியுள்ளதுபோல் தமிழ் தட்டச்சு செய்யமட்டுமே சற்று கடினமாக இருக்கிறது. உண்மையிலேயே இதைப் போன்றதொரு application-ஐயே நான் தேடிக் கொண்டிருந்தேன். ஏனெனில் தற்போது நோக்கியாவினால் வெளியிடப்படும் பெரும்பாலான மொபைல்களில் தமிழ் படிக்க மட்டுமே வசதி உள்ளது. ஆனால் தட்டச்சு செய்ய வசதி இல்லை. இந்த application மிகவும் உதவியாக இருக்கும். நான் என் நண்பர்கள் அனைவருக்கும் இதை தெரியப்படுத்துகிறேன். உங்கள் உதவிக்கு மிக்க நன்றி. உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்.
நன்றி,
வான்முகிலன்
ஹரன்பிரசன்னா, இது யுனிகோடா?
எனக்குத் தமிழ் எஸ்.எம்.எஸ். ஆர்வம் லேது, அட்லீஸ்ட் ட்விட்டர் செய்யமுடிந்தாலாவது நன்றாயிருக்கும் :-S
- என். சொக்கன்,
பெங்களூரு.
சொக்கன், யூனிகோட்தான்.
இப்போதைக்கு டிவிட்டரில், மெயிலில் தமிழில் தட்டி அனுப்ப ஒரே வழி, தமிழ் உள்ள மொபைல்களைப் பயன்படுத்துவதுதான். நோக்கியா 6030வில் இது உள்ளது. நோக்கியா 6030வில் கேமரா, ப்ளூடூத், பெரிய திரை என எதுவுமே கிடையாது என்பதுதான் சோகம்.
எல்லா ஃபோன்களிலும் தமிழ்த் தட்டச்சை கட்டாயம் ஆக்க ஏன் இத்தனை பிரச்சினை என்பது தெரியவில்லை. அதைச் செய்தால், நாமெல்லாம் டிவிட்டரை இன்னும் நாறடித்துவிடலாம்.
சோனி w880i- இதிலும் நன்றாகவே வேலை செய்கிறது.
நம்பீல் மொபைல்லே இது வொர்க்கு ஆகல்லே. தொடர்புடைய நிறுவனத்தை அணுகியிருக்கிறேன்.
சொக்கன்,
ஆனால் இதை வைத்துக்கொண்டு கண்டிப்பாக ட்விட்டலாம். நம்முடைய ஃபோனிலிருந்து ட்விட்ட ஒரு 10 நிமிடம் தேவைப்படும், அவ்வளவே. அதுவும் ஏர்டெல் சப்ஸ்க்ரைபராக இருந்தால், இன்னும் வசதி.
சொல்ல மறந்த இன்னொரு விஷயம்... இதே போன்று முன்பு UCSC பல்கலைக்கழகத்தில் செல்லினம் என்ற ஒரு ப்ராஜக்ட் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது (முரசுவினுடைய செல்லினம் அல்ல, இது வேறு). இப்பொழுது எங்கே போனது என்று தெரியவில்லை. அதில் காப்பி/பேஸ்ட் வசதி இருந்ததாக ஞாபகம்.
6030 மட்டுமல்லாது, அனேக midrange நோக்கியாக்களில் தமிழ் உள்ளிடு வசதி இருக்கிறது.
அப்புறம், என்னுடைய அனேக ட்வீட்கள் (ரிப்ளை அல்லாதது) மொபைலினூடாக அனுப்பியவைதான்.
Post a Comment