Thursday, June 24, 2010

தமிழ் இல்லாத மொபைல்களிலிருந்து தமிழில் டிவிட் செய்ய அல்லது தலையைச் சுற்றி மூக்கைத் தொடுவது எப்படி?

தமிழில் நேரடியாக டிவிட் செய்ய வசதியிருக்கும் புண்ணியவான்கள், இப்ப தமிழ்ல டிவிட் செய்யலைன்னா என்ன என்னும் தத்துவவாதிகள், இந்த டிவிட்டையே ஒழிச்சாத்தான் சரிப்படும் என்னும் புரட்சிவாதிகள், இதோ இந்த எழுத்தோடு நிறுத்திக்கொள்வது நல்லது.

மொபைலில் இருந்து எப்படியும் தமிழில் டிவிட் செய்தே ஆகவேண்டும் என்று நினைக்கும் என்னைப் போன்ற தீவிரவாதிகளுக்கு நல்வரவு.

நேரடியான எளிமையான வழியை, நேற்றிரவு இதற்கென உழைத்து, கிருபா உருவாக்கித் தந்துவிட்டார். நான் ஊருக்குப் போவதால் இதனைச் செய்து தாருங்கள் எனக் கேட்டது எனக்கே கொஞ்சம் ஓவராகத்தான் இருந்தது. இப்படியெல்லாம் கேட்காவிட்டால் இவர் செய்யமாட்டார் என்பதும் அதன் இன்னொரு பக்கம்!

http://krupashankar.com/tamiltweet/a.aspx

மொபைலில் மேலே உள்ள யூ ஆர் எல்லுக்குச் சென்று, உங்கள் டிவிட்டர் ஐடி பாஸ்வேர்டை கொடுத்து, நீங்கள் டிவிட் செய்யவேண்டும். ஆங்கிலத்தில் தட்டிவிட்டு அனுப்பினால், அது தமிழாக மாற்றப்பட்டு டிவிட்டரில் வரும். நீங்கள் ஆங்கிலத்தில் டைப் செய்யும்போது, தமிழ் ஃபொனடிக்கை மனத்தில் வைத்துக்கொண்டு தட்டவேண்டும். ஏனென்றால் அதில் தமிழ் டிஸ்ப்ளே (ப்ரிவியூ) வராது. இது ஒரு வழி. ஜிபிஆர்எஸ் உள்ள பெரும்பாலான மொபைல்களுக்கு இது போதுமானது. இன்னும் இதில் அதிகரிக்கவேண்டிய வசதிகள் உள்ளன. அவற்றையெல்லாம் ஒவ்வொன்றாக கிருபா செய்வார் என எதிர்பார்க்கலாம். (விடமாட்டோம்!)

இன்னொரு வழி - மூக்கைச் சுற்றி காதைத் தொடும் வழி.

என் நோக்கியா ஈ71 மொபைலில் இது சரிப்பட்டு வருகிறது.

இந்த சுற்றி மூக்கைத் தொடும் வழிக்கு கீழே உள்ள வசதிகள் உங்கள் மொபைலில் இருக்கவேண்டும்.

01. உங்கள் மொபைலில் காப்பி + பேஸ்ட் ஆப்ஷன் இருக்கவேண்டும்.
02. தமிழ் இண்டிக் எஸ் எம் எஸ் அனுப்பும் வசதி இருக்கவேண்டும்.
03. ஒரு அப்ளிகேஷன் ஓடிக்கொண்டிருக்கும்போதே, பின்னணியில் இன்னொரு அப்ளிகேஷனை ஓட்டிக்கொள்ளும் வசதி இருப்பது நல்லது. (Background running.)

இனி நீங்கள் செய்யவேண்டியது இதுதான்:

01. முதலில் தமிழ் இண்டிக் எஸ் எம் எஸ் அனுப்பும் வசதியை இன்ஸ்டால் செய்துகொள்ளுங்கள். அதில் நீங்கள் அனுப்ப நினைக்கும் டிவிட்டை டைப் செய்து, அதனை டிராஃப்டாக சேவ் செய்துகொள்ளுங்கள்.

02. உங்கள் டிவிட்டர் பக்கத்தைத் திறந்து வைத்துக்கொள்ளுங்கள்.

03. உங்கள் மொபைலில் defaultஆக இருக்கும் மெசேஜில் சென்று, நீங்கள் சேமித்த டிராஃப்ட் எஸ் எம் எஸ்ஸை திறந்துகொள்ளுங்கள். நீங்கள் தமிழில் தட்டியது கட்டம் கட்டமாக இருக்கும். அதனைப் பற்றிக் கவலைப்படாமல் அதனை காப்பி செய்துகொள்ளுங்கள்.

04. உங்கள் டிவிட்டரில் சென்று, அதனை பேஸ்ட் செய்யுங்கள். அப்போதும் கட்டம் கட்டமாகத்தான் தெரியும். நீங்கள் டிவிட்செய்துவிட்டால், ப்ரௌசரில் சரியாகத் தெரியும்.

அவ்வளவுதான்.

மேலே உள்ள சுற்றி வளைத்த தமிழ் உள்ளிடுகையில் உள்ள பயன்கள் என்ன என்ன?

01. தவறு வராமல் டைப் செய்ய ப்ரிவியூ உள்ளது.

02. இதே முறையில் நீங்கள் மடலும் அனுப்பலாம் என்பதுதான் மிக முக்கியமானது.

செம்மொழி மாநாட்டில் மூழ்கித் திளைத்துக்கொண்டிருக்கும் நம் முதல்வர் நினைத்தால் ஒரே நாளில், இனி தமிழ்நாட்டில் விற்பனையாகும் அனைத்து மொபைல்களிலும் தமிழ் உள்ளிடும் வசதியும், தமிழ் பார்க்கும் வசதியும் கட்டாயம் இருக்கவேண்டும் என்று சட்டமியற்ற இயலும். அவருக்கு இருக்கும் செல்வாக்கை வைத்து, இதனை இந்தியா முழுமைக்குமாக, இந்திய மொழிகள் அனைத்தும் இருந்தால் மட்டுமே மொபைலை இந்தியாவில் விற்க இயலும் என நிர்ப்பந்திக்க முடியும். இந்தியா என்னும் மாபெரும் சந்தையை, இந்த நிர்ப்பந்தத்தால் எந்த மொபைல் நிறுவனமும் இழக்க முன்வராது. இதுதான் நிரந்தரத் தீர்வு. ஆனால் நாம் என்றைக்கு நிரந்தரத் தீர்வைப் பற்றி கவலைப்பட்டிருக்கிறோம்?

கருணாநிதியைப் பற்றி ஒருவரியாவது எழுதாவிட்டால், பதிவு எழுதிய நிறைவே வருவதில்லை. :-)

5 comments:

Anonymous said...

நல்ல வழி(கள்) நன்றி பிரசன்னா & கிருபா ;)

- என். சொக்கன்,
பெங்களூரு.

Vijay said...

மிக்க நன்றி பிரசன்னா.

S Krupa Shankar said...

கவரேஜ்க்கு நன்றி. உங்க ப்ளாக்ல என் பேர் வந்ததே என் பாக்கியம்.

அப்புறம், அதுலயும் ப்ரிவ்யூ ஆப்ஷன் இருக்கு. அடிச்சதை தமிழ்ல பாத்துட்டு அப்பறமா போஸ்ட் பண்ணிக்கலாம். To textboxல @tamil, @haranprasanna எல்லாம் குடுத்துக்கலாம், தமிழ்ல கன்வர்ட் ஆகாது.

ஆனால் இப்போ எல்லாம் நீங்க ஒரு டெக் பதிவரா மாறிண்டு வரர்தைப் பத்தி பொதுமக்களின் கருத்து என்ன? :-)

Vijay said...

\\கருணாநிதியைப் பற்றி ஒருவரியாவது எழுதாவிட்டால், பதிவு எழுதிய நிறைவே வருவதில்லை. :-)\\
செம்மொழி மாநாட்டோடு அரசிலிலிருந்து விடை பெற்றுக் கொண்டு தமிழுக்காகவும் கட்சிக்காகவும் உழைப்பேன். ஆட்சிப்பொறுப்பை ஸ்டாலினிடம் கொடுத்துடுவேன்னு சொன்னாரே, அதைப் பற்றி யாரும் வாயே திறக்கக் காணோம். கொலைஞர் தான் மறந்துட்டார்’னா ஞாபகப்படுத்த வேண்டியது மக்களாகிய நம் கடமை இல்லையா?

Aranga said...

ஹரன் , கிருபா பக்கத்தில் பிரிவ்யூ தெரிகிறது , அதை காப்பி செய்யும் வசதியுடன் வைத்தால் என்னை போல தமிழ் கீபோட் இல்லாடஹ் ஆண்ட்ராய்டர்கள் தமிழை மற்ற இடங்களிலும் (Chat , facebook) எழுத உதவும் .

ஐபோனுக்கு கூட இது உதவும்

(நீங்க சொன்னா கிருபா தட்டமாட்டாரே ?):)