Tuesday, August 15, 2006

திரை - கவிதை

காற்றில் ஆடும் ஜன்னல் திரையில்
மலர்ந்திருக்கின்றன போலிப்பூக்கள்
என்னைப் பார்த்தவண்ணம்.

படுக்கைக்கு மேலே
உத்திரத்தில் தொங்குகிறது
நிலவும் பிறையும்
சில நட்சத்திரங்களும்;
திரைக்கு வெளியில் அலையும் கேலக்ஸி
படுக்கையறைக்குள்ளே ஒரு விளக்கணைப்பில்.

இரவுகள் பகலாகவும்
பகல்கள் போலியாகவும்
அங்குமிங்கும் அலைகின்றன
சிறிய திறப்பைத் தேடி

உள்ளங்கைக்குள் வேர்த்தடங்கிக்கிடக்கும் வெளி

கையைத் திறக்க
மெல்ல கசிகிறது
நெகிழும் திரையின் வழியே
என் படுக்கையறை
உலகுக்கு.

2 comments:

PKS said...

Prasanna,

Of late, your kavithaikal are on expected lines. I mean, very predictable to a person who has read you for sometime.

Thanks and regards, PK Sivakumar

கானகம் said...

//திரைக்கு வெளியில் அலையும் கேலக்ஸி//

இப்போதெல்லாம் உங்கள் கவிதைகளில் ஆங்கிலக் கலப்பு அதிகம் தெரிகிறது. மற்றபடி அனைத்தும் சுமாரான கவிதைகள் பிரசன்னா..