Friday, October 1, 2010

எந்திரன் - சுரேஷ்கண்ணனுக்கு நன்றி!

சுரேஷ்கண்ணனுக்கு நன்றி!

பொதுவாக சுரேஷ்கண்ணன் ரஜினி படம் வருவதற்கு முன்பு ஒரு தடவைதான் திட்டுவார். இந்த முறை இரண்டு மூன்று முறை திட்டியதாலோ என்னவோ படம் எக்கசக்கமாக நன்றாக இருந்துவிட்டது. ரஜினி ரசிகர்கள் ஒவ்வொருவரும் சுரேஷ் கண்ணனுக்குக் கடமைப்பட்டிருக்கிறார்கள். வணிக சினிமாவுக்கு எதிராக அவரது போராட்டம் தொடரும் என்று அறிவித்திருக்கிறார். அடுத்தடுத்த ரஜினி படத்துக்கும் இப்படி அவர் திட்டி பதிவெழுதி, எஸ்பிபி முதல் பாட்டு பாடினால் எப்படி ரஜினி படம் ஹிட்டாகிவிடுமோ அதுபோல, இவர் திட்டினாலே ஹிட்டாகிவிடும் என்னும் உண்மையை நிலைநிறுத்தக் கேட்டுக்கொள்கிறேன்.

படம் - சான்ஸே இல்லை. ரஜினியின் தீவிர ரசிகர் ஷங்கரைப் பார்க்க நேர்ந்தால் நெடுஞ்சாண்கிடையாக அவர் காலில் விழுந்துவிடுவார்.

படம் பற்றிய எனது உணர்வு ரீதியான ரஜினி ரசிகனின் விமர்சனம் தமிழ் பேப்பரில் நாளை வெளிவரும். கோட்பாட்டு ரீதியான விமர்சனங்களை சுரேஷ்கண்ணன்கள் எழுதுவார்கள். இப்படியாக விமர்சகர் சுரேஷ்கண்ணன் ஒரு குறியீடாகவும் மாறியிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.

தமிழ் பேப்பரில் நாளை பார்க்கலாம்.

5 comments:

மானஸ்தன் said...

நபநபி:>

Anonymous said...

சுடச்சுட என்று இல்லாவிட்டால் விமர்சனத்திற்கு மதிப்பே இல்லை.தமிழ்ப்பேப்பர் வருவதற்குள் நூறு பேர் எழுதியிருப்பார்கள்.இதிலெல்லாம் better never than late :)

ஈ ரா said...

நன்றி ஹரன்,

உண்மை..

Anonymous said...

முதல் நாள் ஒரு மாதிரி, அடுத்த நாள் வேறு மாதிரி எழுதி, தங்கள் மேல் நான் வைத்திருந்தத மதிப்பைத் தூள் தூளாக்கி விட்டீர்கள் ஹரன்..


ஈ. ரா

ஈ ரா said...

மன்னிக்கவும்,

தங்கள் விமர்சனத்தை தாமதமாகப் பார்த்தேன்... விமர்சனம் நன்று.. ஆனால், தாங்கள் வேறொரு கட்டுரையில் ஓரிரு நாள் ரசிகர்கள் செய்யும் ஆர்ப்பாட்டங்களுக்கு ரஜினியை சகட்டுமேனிக்கு குற்றவாளியாகி இருப்பதைப் பார்த்தே என் கண்டனத்தைத் தெரிவித்தேன்..

நன்றி...