Sunday, November 9, 2003

நட்சத்திரங்களுடன் சில நிமிடங்கள்
--ஹரன் பிரசன்னா

"ஓ நட்சத்திரங்களே...
எத்தனை யுகம் இவ்விளையாட்டு?

கடைக்கோடியிலொருவனாய்
கணித்தீர்களோ?

புதிய வானம்
புதிய சிறகு
பறவை பழையது
பழுது
சரி மிக்கச் சரி

பழைய வானம்
பழைய சிறகு
ஆனால்-
பறவை புதிது
வலிது

குருவியின் சிறகுள்
பருந்தின் வலிமை?
இல்லை.
பருந்தின் சிறகுள்
பருந்தின் வலிமை.
பறக்கும் மனது.

இன்றே இறுதி.
மௌனம் கலைத்து
வ்¢டை வேண்டும்.
கேள்வி என்ன?
புதிதாய் ஒன்றுமில்லை.
கவி எவன்?"

நட்சத்திரங்கள் ஓர் குரலில்
சொல்கின்றன.

"புதிய வானம்
புதிய சிறகு
பழைய பறவை.
பெரிதாய்ப்
பழுதொன்றுமில்லை.

பழைய வானம்
பழைய சிறகு
ஆனால்-
பறவை புதிது
வலிது
பழுதில்லை என்று சொல்வதற்கில்லை.

மனம் புதிதா?

உடல் இழந்து
உயிர் இழந்து
உணர்வால் வெளியில் கலத்தல்
கவிமனம்.
நட்சத்திரங்கள் நாங்கள்
மின்னுவன அல்ல.
கலந்துவிட்ட கவிகள்"

No comments: