Wednesday, September 1, 2004

இந்தப் பூக்கள் விற்பனைக்கு (கவிதை)


மரத்தடி யாஹூ குழும போட்டிக்கு உள்ளிட்ட கவிதையைப் படிக்க சொடுக்கவும்.


இவர் எனக்கு ஒரு கடிதம் அனுப்பி இருந்தார். இவர் யாரென்று தெரியவில்லை. ஒரு எழுத்தாளர் என்பது மட்டும் தெரிகிறது. நான் இரண்டு பேரைச் சந்தேகித்து வைத்திருக்கிறேன். அவர்களாக இருக்குமா என்று தெரியவில்லை.

அவர் எழுதிய கடிதத்தில் "அவர் முகமூடி அல்ல என்றும் அதை நான் எனது வலைப்பதிவில் சொல்லவேண்டும்" என்று கேட்டுக்கொன்டிருந்தார்.

சொல்லிவிட்டேன்.

அவர் ஏன் என்னிடம் இதைச் சொன்னார் என்பது எனக்குப் புரியவில்லை. நான் சந்தேகிக்கும் நபர்கள்தானோ என்று என் சந்தேகம் வலுப்பெறுகிறது. அப்படி இல்லாமல் போனால் ஒரு கரும்பு ஜூஸ் குடிக்கவேண்டியிருக்கும்.

1 comment:

நெல்லை ஜிஷ்ணு @ ஹரன் பிரசன்னா said...

நான் உங்களிடம் சொல்லச் சொன்னது நான் முகமூடி இல்லை என்று சொல்லச்சொல்லி. அதற்கு மாறாய் நான் முகமூடி என்றே நீங்களும் சித்தரிக்க முனைந்திருக்கிறீர்கள். இது என்ன கூத்து? ஒருவன் பெயர் சொல்லாவிட்டால் அவன் முகமூடியா? இணையத்தில் எழுதும் எல்லாருமே முகமூடிதான். நீவிர் உட்பட.

உங்களிடம் கேட்டிருக்கவே கூடாது. கேட்டதே நான் செய்த தவறு.

நீங்கள் அனுப்பியிருந்த தனி மடலுக்குப் பதில் அனுப்பும்போதே தெளிவாக நான் முகமூடி இல்லை என்று சொல்லியிருந்தேன். இன்னும் உங்களுக்குச் சந்தேகம் தீரவில்லை போல.

உண்மையான பெயர் சொல்ல விரும்பாதவனுக்குத்தான் எத்தனைக் கொடுமைகள்? ஒருவர் உங்கள் குழுவில் என் முதலெழுத்தையே கேள்வி கேட்டிருந்தார்.

பேசிப் பிரயோஜனமில்லை என்றறிகிறேன்.

இப்படிக்கு, முகமூடி.