ஏதோ காரணத்துக்காக அழுதது
சுவரில் அசையாமல் அமர்ந்திருக்கும்
வண்ணத்திப் பூச்சியின்
மெல்ல அசையும் சிறகையும்
ஆயிரம் எறும்புகள்
ஊர்ந்து செல்லும் ஆச்சரியத்தையும்
அதிசயமாய் நோக்கி மலர்ந்தது குழந்தை
சிறிய சறுக்கில் ஒருமுறை சறுக்கி சிரித்தது
தெருவில் செல்லும் ஜவ்வுமிட்டாய்க்காரன்
எதிரே நின்று காசில்லாமல் கைநீட்டியது
கைதட்டிக்கொண்டிருக்கும் பொம்மையின்
அசையும் கைகளுக்குள்
சிறைப்பட்டுப்போனது அதன் உலகம்
என் தலைமீது கவிழக்
காத்துக்கொண்டிருக்கும் வானத்தை
பார்வையிலேயே நிறுத்தி வைத்தேன்.
7 comments:
//எதிரே நின்று காசில்லாமல் கைநீட்டியது
கைதட்டிக்கொண்டிருக்கும் பொம்மையின்
அசையும் கைகளுக்குள்
சிறைப்பட்டுப்போனது அதன் உலகம்//
Fantastic. Its a real description of the situation from kids view. But what does this last para tells???
என் தலைமீது கவிழக்
காத்துக்கொண்டிருக்கும் வானத்தை
பார்வையிலேயே நிறுத்தி வைத்தேன்.//
Jayakumar
//தெருவில் செல்லும் ஜவ்வுமிட்டாய்க்காரன்
எதிரே நின்று காசில்லாமல் கைநீட்டியது//
ச்சோ ச்வீட்!! :)
நல்ல அவதானிப்பு, சரியான இடத்துல புகுத்தியிருக்கீங்க.
சில விஷயங்கள் குழந்தைகள் செய்யும்போது மட்டும் தான் அழகு. பெரியவங்க தன்கிட்ட தகுதி இல்லாம கைநீட்டிடும்போது சுருதி பிசகிடுது. :(
ஜெயஸ்ரீ, ஜெயகுமார் நன்றி.
ஜெயஸ்ரீ, உங்களுக்கு மத்த வலைப்பதிவுகள்ல பின்னூட்டம் இடக்கூடத் தெரியுமா? ரொம்ப ஆச்சரியாம இருக்கு.
//என் தலைமீது கவிழக்
காத்துக்கொண்டிருக்கும் வானத்தை
பார்வையிலேயே நிறுத்தி வைத்தேன்//
எப்படித்தான் இப்படி புரியாத வரிகளை எழுதுகிறீர்களோ?? சீக்கிறம் எல்லோருக்குமான கவிதையை எழுத முயலுங்கள்
சுப்பிரமணிய சாமி, எல்லாருக்குமான கவிதைகள் என்று ஒன்று இல்லை என்பதே என் எண்ணம். தனிப்பட்டவர்களுக்கான கவிதைகள் அதற்கேற்ற ஒரு பொதுவை உருவாக்கிக்கொள்கிறது, கவிதை என்கிற தளத்தில். உங்கள் கருத்துக்கு நன்றி.
சுப்பிரமணிய சாமி, எல்லாருக்குமான கவிதைகள் என்று ஒன்று இல்லை என்பதே என் எண்ணம். தனிப்பட்டவர்களுக்கான கவிதைகள் அதற்கேற்ற ஒரு பொதுவை உருவாக்கிக்கொள்கிறது, கவிதை என்கிற தளத்தில். உங்கள் கருத்துக்கு நன்றி.
அசையும் கைகளுக்குள்
சிறைப்பட்டுப்போன உலகை
கண்டு வந்தது என் (குழந்தை) மனது.
Post a Comment