நீண்ட நாள்களுக்குப் பின்
புரட்டியபோது
அடையாளம் தெரியாமல்
சிதைவுற்றிருந்தது
பழம்புத்தகத்தின் பக்கங்களில்
தடங்கள்
எண்களை இணைத்து
சித்திரம் கூட்டுதல் போல
கோடுகளை ரொப்ப
புதிய தடங்கள்
காற்றெங்கும்
தீராத ஒலிகளை நிரப்பி
என் காலடி மண்ணை
அரித்துக்கொண்டோடுகிறது நதி
3 comments:
பிடிச்சுருக்கு கவிதை.
உங்கள் தமிழினி கட்டுரை படித்தேன். சில கருத்துகளோடு முரண் இருந்தாலும், நிறைய விஷயங்களோடு ஒத்துப் போக முடிந்தது. விரிவாகவும் / ஆழமாகவும் இருந்தது.
ஜ்யோவ்ராம் சுந்தர், நன்றி.
kathai sari than etho solla varenka nangalum purisinga mutiyuthu, katturai ok current affair other wise document but why kavithai u too haran i can't unterstand the poems
Post a Comment