பியானோவையே தனது உயிருக்கு மேலாக நினைக்கும் ஒரு பெண்ணின் (Ada McGrath) வாழ்க்கை பற்றிய திரைப்படம். அவள் பேச விரும்பாமல் தனது ஆறாவது வயதில் தன் பேச்சை நிறுத்தியவள். அவளது உலகம் பியானோவில் அவள் உருவாக்கும் புதுப்புது இசை வடிவங்களின் வழியாகவே முழுமையடைகிறது. நியூசிலாந்திற்கு மணமாகித் தன் மகளுடன் செல்லும் அவள், தன் பியானோவை அடைய தன் கணவனின் நண்பன் (Baines) சொல்லும் வர்த்தகத்திற்கு உடன்படுகிறாள். அவள் பியானோ வாசிக்கும்போது அவன் என்ன விரும்பினாலும் செய்யலாம். ஒவ்வொரு செயலுக்கும் ஒரு தொகை. இப்படியே அவள் அந்த பியானோவை அடைந்துவிடலாம். அவளும் இதற்கு ஒப்புக்கொள்கிறாள். இதையே காரணமாக வைத்து அவளை அடைகிறான். மறுநாள் பியானோவிற்காக அவளுடன் உறவு கொள்வதை மறுத்து அவன் அவளுக்கே பியானோவைத் தந்துவிடுகிறான். மேலும் அவன் அவளை விரும்புவதாகவும் சொல்கிறன். பியானோ கிடைத்துவிட்டாலும் அவளால் அவனை மறக்கமுடியவில்லை. மீண்டும் அவனைச் சந்தித்து தன் காதலைச் சொல்லி அவனுடன் உறவு கொள்கிறாள். இதையறியும் அவள் கணவன் (Alistair) அவளை சிறை வைக்கிறான். தன்னுடன் வாழச் சொல்லியு உறவு கொள்ளச் சொல்லியும் நிர்ப்பந்திக்கிறான். அவள் சம்மதிக்க மறுக்கிறாள். இன்னும் அவள் அவன் நினைப்பாகவே இருக்கும் கோபத்தில் அவள் விரல்களை துண்டித்துவிடுகிறான். தன்னை விட்டுவிடுமாறு கெஞ்சும் அவள் தன் காதலுடன் சென்று வாழ விரும்புவதாக சொல்லுகிறாள். முடிவில் அவள் கணவனும் சம்மதிக்கிறான். தன் பியானோவுடனும் மகளுடனும் தன் காதலனுடன் படகில் செல்லும் அவள் தன் பியானோவைக் கடலில் வீசச் சொல்லுகிறாள். பியானோ கடலில் விழும்போது அதோடு பிணைந்திருக்கும் கயிறில் தன் கால்களை தானே பிணைத்துக்கொள்ள, பியானோ அவளையும் சேர்த்து இழுத்துக்கொண்டு கடலில் விழுகிறது. முதன்முறையாக அவளது குரலை நாம் கேட்கிறோம். எவ்வித சலனமுமின்றி கடலில் மிதக்கும் அவளது பியானோவோடு அவளும் மிதக்க விரும்புகிறாள். ஆனால் கடைசி நிமிடத்தில் காலைக் கட்டியிருக்கும் கயிறை உதறிவிட்டு மேலே வந்து தன் காதலனுடன் இணைகிறாள். அவர்கள் தங்கள் வாழ்க்கையைத் தொடங்குகிறார்கள்.
இப்படத்தின் இசையும் ஒளிப்பதிவும் அபாரமாக இருக்கிறது. பியானோவை அடைவதற்காக Baines சொல்லும் வியாபாரத்திற்கு ஒப்புக்கொள்ளும் அவள், அவன் உடல்ரீதியாக அவளை அணுகும்போது அமைதியாயிருக்கிறாள். பின்பு பியானோ கிடைத்தபின்பும் அவளுக்கு அவன் நினைப்பு வரும்போதுதான், அவள் மனதில் இருக்கும் அவளது காதல் அவளுக்கே புரிகிறது. இந்த மாற்றம் மிகச் சிறப்பாக வெளிப்படுத்தப்படுகிறது. கடைசி காட்சியில் பியானோ கடலுக்குள் தள்ளப்படும்போது அவளும் தன்னை அதோடு பிணைத்துக்கொண்டு விழுகிறாள். கடலின் நிசப்தத்தில் அவளது குரல் மட்டும் ஒலிக்க அவள் ஓர் ஏகாந்த நிலையை அனுபவிக்கும் காட்சி மிகச் சிறப்பானது. ஆனாலும் பியானோவை உதறிவிட்டு, காதலுக்காக மேலே வருகிறாள். சொற்களை விழுங்கிவிட்டு வாழ்ந்தவள் அவள். பியானோவின் இசையையும் விழுங்கிவிட்டு தன் வாழ்க்கையைத் தொடங்குகிறாள்.
ஒருமுறை பார்க்கலாம்.
2 comments:
எங்கய்யா கிடைக்குது இந்த மாதிரிபடங்கள் எல்லாம் ?? இசையை அடிப்படையாகக்கொண்ட படங்கள் என்றால் ஹீரோ பொம்மைமாதிரி பியாநோவையோ கிடாரையோ வைத்திருக்க சம்பந்தா சம்பந்தம் இல்லாமல் இசை இருக்க ஹீரோ வாசிப்பார். அவ்வளவுதான் தமிழ் மக்களின் இசை ரசனை. தில்லானா மோகனாம்பாள் மட்டும் விதிவிலக்கு.
ரசனைகள் பலவிதம்.. உங்கள் விமர்சனம் அருமை. வேற்று மொழிப் படங்களை பார்ப்பது ஒரு வகையான் ஆர்வம் தேவைப்படும் விஷயம். அதற்கு விமர்சனமும் எழுதவேண்டுமெனில் பெரிய விஷயம்தான்..வாழ்த்துக்கள்.
நன்றி.
ஜெயக்குமார்
நல்ல பதிவுங்க ஹரன்.
// எங்கய்யா கிடைக்குது இந்த மாதிரிபடங்கள் எல்லாம் ?? //
ஜெயக்குமார் சென்னை பீச் ஸ்டேசன் பக்கத்துள சிடி கடை இருக்கு கௌத் என்பவரிடம் கிடைக்கும்.அவர் எண்: 9841898145.
Post a Comment