கடல் சிறுமியாக மாறிய கதை
ஓட்டமும் நடையுமாக
கடற்கரையைக் கடந்த நாளில்
தற்செயலாகக் கவனித்தேன்
ஒரு சிறுமி கையில் பொம்மையுடன்
கடலோடு பேசிக்கொண்டிருந்தாள்.
வானெங்கும் பறந்துகொண்டிருந்த பட்டங்கள்
திக்கற்றுத் திரிந்தன
சிறுமியின் வார்த்தைகளைப் போல
ஆர்பரித்துக்கொண்டிருந்த கடல்
மெல்ல அடங்கத் தொடங்கியது
வீட்டுத் தோட்டத்தில்
வளரத் தொடங்கியிருக்கும் ரோஜா பதியனைப் பற்றி
அவள் சொல்லத் தொடங்கியபோது
கரையெங்கும் ரோஜாவின் வாசம்
அம்மாவின் மீது குற்றச்சாட்டு அத்தியாயத்தில்
நூலொன்று அறுந்து
தலைகுத்திக் கீழே விழுந்தது
சிரித்துக்கொண்டிருந்த பட்டம்
மெல்ல இருட்டத் தொடங்கி வானில் நட்சத்திரங்கள் தோன்றின
அவள் பொம்மைக்கு நட்சத்திரங்களைக் காட்டினாள்
செல்ல நாய்க்குட்டிக்கு சில முத்தங்களைக் கொடுத்தனுப்பினாள்
கரையின் இங்கு இடுக்குகளையெல்லாம்
கொஞ்சலால் நிரப்பிக் கொண்டிருந்தாள் சிறுமி
கடல் தன்னை மறந்து
சிறுமியோடு மானசீகமாகப் பேசிக்கொண்டிருக்க
பொம்மை அலைந்துகொண்டிருக்கும் கடலாய்
மாறிப் போயிருந்தாள் சிறுமி.
4 comments:
wow. superb.
"ஆர்ப்பரித்து" என்று இருக்க வேண்டும் இல்ல?
-வித்யா
தமிழ்நாட்டில் புதுக்கவிதை எழுதுபவர்களுக்கெல்லாம் விஷ ஜுரம் வருகிறதாமே? உங்களுக்கு வரவில்லையா?
ரொம்ப நல்லா இருக்கு.
அனுஜன்யா
நல்லா இருக்குங்க கவிதை..
Post a Comment